Home One Line P2 பாடகி ‘பிங்க்’ கொவிட் -19 பாதிப்பிலிருந்து மீட்பு- நோய் நெருக்கடி நிதிக்கு 1 மில்லியன் டாலர்...

பாடகி ‘பிங்க்’ கொவிட் -19 பாதிப்பிலிருந்து மீட்பு- நோய் நெருக்கடி நிதிக்கு 1 மில்லியன் டாலர் நன்கொடை!

513
0
SHARE
Ad

வாஷிங்டன்: இரண்டு வாரங்களுக்கு முன்பு கொவிட்-19 பாதிப்புக்கு உட்பட்டு, உலகப்புகழ் பெற்ற அமெரிக்கப் பாப் பாடகி பிங்க் முழு மீட்பு அடைந்துள்ளதாக தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை இச்செய்தியைப் பகிர்ந்து கொண்ட பிங்க், மேலும் கொவிட்-19 நிவாரண முயற்சிகளுக்கு 1 மில்லியன் டாலர் நன்கொடையை அறிவித்தார்.

#TamilSchoolmychoice

“இரண்டு வாரங்களுக்கு முன்பு எனது மூன்று வயது மகன் ஜேம்சனும் நானும் கொவிட் -19 அறிகுறிகளுக்காக சிகிச்சையளிக்கப்பட்டோம்” என்று அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

“அதிர்ஷ்டவசமாக, எங்கள் குடும்ப மருத்துவரிடம் பரிசோதனைகள் மேற்கொண்டோம். நான் நேர்மறையான அறிகுறிகளுக்காக பரிசோதிக்கப்பட்டேன். எனது குடும்பத்துடன் ஏற்கனவே வீட்டில் தனித்து இருந்தோம். எங்கள் மருத்துவரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாக நாங்கள் தொடர்ந்து தனித்து இருந்தோம். சில நாட்களுக்கு முன்பு நாங்கள் மீண்டும் பரிசோதிக்கப்பட்டோம், இப்போது எதிர்மறையாக முடிவு வந்துள்ளது”

இந்நோயை மிகவும் தீவிரமானது மற்றும் உண்மையானது என்று குறிப்பிட்ட பிங்க், ஒவ்வொரு அமெரிக்கருக்கும் பரிசோதனை கிடைக்கப் போதுமான அளவு விரைவாக அரசு செயல்படவில்லை என்று கண்டனம் தெரிவித்தார்.

“இந்த நோய் இளைஞர்களையும், முதியவர்களையும், ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமற்ற, பணக்காரர் மற்றும் ஏழைகளை பாதிக்கிறது என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் நம் குழந்தைகள், நம் குடும்பங்கள், நம் நண்பர்கள் மற்றும் நம் சமூகங்களைப் பாதுகாக்க சோதனையை இலவசமாகவும் பரவலாக அணுகவும் செய்ய வேண்டும்,” என்று அவர் தொடர்ந்தார்.

தனது 1 மில்லியன் டாலர் நன்கொடையில் பாதி பிலடெல்பியாவில் உள்ள டெம்பல் பல்கலைக்கழக மருத்துவமனை அவசர நிதிக்கு பயனளிக்கும் என்று அவர் கூறினார்.

மேலும், 500,000 டாலர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயரின் அவசர கொவிட் -19 நெருக்கடி நிதிக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.

“நம் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்க மிகவும் கடினமாக உழைக்கும் நம் சுகாதார வல்லுநர்கள் மற்றும் உலகில் உள்ள அனைவருக்கும் நன்றி. நீங்கள் எங்கள் ‘ஹீரோ’க்கள்! இந்த அடுத்த இரண்டு வாரங்கள் மிக முக்கியமானவை. தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள். தயவுசெய்து தங்குங்கள். ” என்று பிங்க் முடித்தார் .