Home One Line P2 கொவிட்-19: 76 நாட்களுக்குப் பிறகு வுஹான் நகரம் மீண்டும் செயல்படத் தொடங்கியது!

கொவிட்-19: 76 நாட்களுக்குப் பிறகு வுஹான் நகரம் மீண்டும் செயல்படத் தொடங்கியது!

692
0
SHARE
Ad
படம்: நன்றி சின்ஜுவா

பெய்ஜிங்: 76 நாட்கள் ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு, வுஹான் நகரம் இறுதியாக மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் இந்நகரத்தின் நுழைவாயில் மற்றும் வெளியேற்ற எல்லைகள் மீண்டும் திறக்கப்படன.

11 வார ஊரடங்கு உத்தரவின் முடிவை குடியிருப்பாளர்கள் விளக்குகளால் வரவேற்றனர்.

#TamilSchoolmychoice

இன்று முதல், நகரத்தில் 11 மில்லியன் குடியிருப்பாளர்கள் அதிகாரப்பூர்வ ஒப்புதலின்றி அந்நகரத்திலிருந்து வெளியேறி, நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.

இருப்பினும், கொவிட்-19 நேர்மறை நபர்களுடன் ஏதேனும் நெருங்கிய தொடர்பு இருந்தால், அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க அவர்கள் கைபேசிகளில் பயன்பாட்டைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.