கோலாலம்பூர்: 122 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 7,500 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை வரையிலும் நாட்டில் 6,698 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புபவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதாலி, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து குறிப்பாக மலேசியர்கள் நாடு திரும்பி வரும் நிலையில் இந்த தனிமைப்படுத்துதல் அவசியம் என்று சுகாதார அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.