Home One Line P2 வீட்டில் பாதுகாப்பாக இருந்தவாறு இரசிகர்களை மகிழ்விக்கும் ராகாவின் கலக்கல் காலை குழுவினர்

வீட்டில் பாதுகாப்பாக இருந்தவாறு இரசிகர்களை மகிழ்விக்கும் ராகாவின் கலக்கல் காலை குழுவினர்

688
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கொவிட் -19 தொற்றுநோய் மற்றும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (MCO) காரணமாக, ராகாவின் கலக்கல் காலை அறிவிப்பாளர்கள், அகிலா மற்றும் சுரேஷ் ஏப்ரல் மாதம் முழுவதும் வீட்டில் பாதுகாப்பாக இருந்தவாறே, இரசிகர்களுக்குத் தகவல்களைப் பரிமாறி தொடர்ந்து மகிழ்வித்துக் கொண்டிருப்பர்.

ஒலிபரப்பு சாதனங்கள், ஸ்கைப் (Skype) மென்பொருள் மற்றும் இவைபோன்ற பல நவீன கருவிகளின் துணையோடு இப்பிரிவின் ஒலிப்பதிவு முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டு பின்னர் ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளி வரை காலை மணி 6 முதல் 10 வரை ஒளிபரப்பப்படும். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை ஆக்கப்பூர்வமாக தழுவுவதன் மூலம், ராகாவின் கலக்கல் காலைக் குழுவும் #வீட்டிலேயேஇருங்கள் (#StayHome) என்ற ஆலோசனைக்கு ஏற்ப விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.

#TamilSchoolmychoice

ராகா ரசிகர்கள் ஏப்ரல் மாதத்தில் ஒலிபரப்பாகவிருக்கும் மற்றும் சமூக ஊடகங்களில் இடம்பெறும் பின்வரும் பிரிவுகளைக் கேட்டும் அவற்றில் பங்கெடுத்தும் மகிழலாம்:

  • தன்னார்வலர்களை அங்கீகரித்தல் (6 – 10 ஏப்ரல்):

தேசிய தன்னார்வ வாரத்தை முன்னிட்டு, அகிலா மற்றும் சுரேஷ் ஆகியோர் கொவிட்-19 தொற்றுகளுக்கு மத்தியில் தைரியமாகவும் தன்னலமின்றியும் சமூகத்திற்கு சேவை செய்யும் சில தன்னார்வலர்களைப் பற்றியக் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்வர்.

  • தமிழ் புத்தாண்டு (13 – 17 ஏப்ரல்): 

ராகாவில் ஒலிபரப்பப்படுவதோடு அதன் சமூக வலைத்தளங்களிலும் பகிரப்படும் தங்களின் ‘ராசி பலன்களை’ இரசிகர்கள் அறிந்துக்கொள்ளலாம். மேலும் புத்தாண்டின் போது பொதுவாக வீடுகளைச் சுற்றித் தெளிக்க, குடிக்க மற்றும் பலவகையில் பயன்படுத்தப்படும் ‘மூலிகை நீருக்கு’ மாற்றுப் பொருளைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம். இரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த தமிழ் புத்தாண்டு கொண்டாட்டப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் (Instagram) #CovidTamilNewYear என்று குறிப்பிட்டுப் பகிர்வதன் மூலமும் ராகாவின் Instagram புகைப்பட சவாலில் பங்கேற்கலாம்.

  • புவி நாள் (20 – 24 ஏப்ரல்):

பொது இடங்களில் சுதந்திரமாக நடமாடும் விலங்குகளின் படங்கள் உட்பட கொவிட்-19 தொற்றால் சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பைப் பற்றிய விவாதங்களுக்கு மத்தியில், அவ்விடமும் அச்சூழலும் COVID-க்கு முன்னும் பின்னும் எப்படி இருந்தது என்பதை ஒப்பிடும் வண்ணம் #StayHome என குறிப்பிட்டு ரசிகர்கள் அவ்விடத்தின் தற்போதைய புகைப்படங்களை (கூகுளில் (Google) இருந்து) பகிர்ந்து கொள்ளலாம்.

  • #Covidகவிதை (#CovidKavithai):

ஏப்ரல் மாதம் முழுவதும்,  இரசிகர்கள் கொவிட் தொடர்பான சுவாரசியமான கவிதைகளை உருவாக்கி அதை இன்ஸ்டாகிராமில் (Instagram) ராகாவைப் பின்தொடர்ந்து இணைத்துக் கொண்டு (டேக்-tag) செய்து பகிர்ந்துக் கொள்ளலாம்.

ராகாவைப் பின்தொடர :

raaga.my

இலவச SYOK செயலியை உடனே பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!

www.facebook.com/RAAGA.my

www.instagram.com/raaga.my

இணையம் மற்றும் செல்பேசிகளின் வழியும் (ஆன்-ஏரில்) கேளுங்கள்

இடம்                                                     அதிர்வெண்கள்

கிள்ளான் பள்ளத்தாக்கு                  99.3FM

அலோர்ஸ்டார்                                    102.4FM

பினாங்கு                                               99.3FM

ஈப்போ                                                   97.9FM

சிரம்பான்                                             101.5FM

மலாக்கா                                               99.7FM

ஜோகூர் / ஜோகூர் பாரு                   103.7FM

தைப்பிங்                                              102.1FM

லங்காவி                                              101.9FM

ஆஸ்ட்ரோ அலைவரிசை              859