வாஷிங்டன்: தனியார் அமர்வுகள் மற்றும் வணிகக் கூட்டங்கள் உட்பட ‘சூம்’ சேவைகளைப் பயன்படுத்துபவர்களின் ஆயிரக்கணக்கான இணைய காணொளி சந்திப்பு அமர்வுகள் திறந்த வலைத்தளங்களில் அம்பலப்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
இரகசிய நிதி பதிவுகள் மற்றும் இணைய வகுப்புகளை வெளிப்படுத்தும் உரையாடல்கள் பதிவுகள் இணைய பயனர்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லாமல் அணுகக்கூடியவை என்பதை வாஷிங்டன் போஸ்ட் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
‘பிரேசிலிய மெழுகு’ எவ்வாறு பயன்படுத்துவது என்பதை மாணவர்களுக்கு கற்பிக்கும் அழகு நிபுணர் அமர்வு உட்பட பங்கேற்பாளர்களின் உடையில்லாத காணொளிகளும் இருப்பதாக அது கூறியது.
சூம் காணொளி அமர்வுகள் இயல்பாக பதிவு செய்யப்படவில்லை என்று அறிக்கை கூறுகிறது. ஆனால், அழைப்பாளர் (ஹோஸ்ட்) மற்ற பங்கேற்பாளர்களின் அனுமதியின்றி சூம் சேவையகத்தில் அல்லது தங்கள் கணினியில் பதிவுசெய்து சேமிக்க தேர்வு செய்யலாம்.
இருப்பினும், காணொளி உரையாடலில் பங்கேற்பாளர்கள் அனைவரும் அமர்வு பதிவு செய்யப்படும்போது அறிவிப்பைப் பெறுவார்கள்.
‘பயனர்கள் பதிவைச் சேமிக்க ஒரு பாதுகாப்பான வழியை வழங்கவும், அழைப்பு பாதுகாப்பை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கவும் சூம் முனைப்புடன் செயல்படுவதாக அது ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சூம் காணொளி உரையாடல் பயன்பாடு குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் கொவிட்-19- இன் காரணமாக ஏற்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டுத் தடையைத் தொடர்ந்து பிரபலமடைந்துள்ளது.