Home One Line P1 கெடா: புயலால் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்- கூரை இடிந்து விழுந்ததில் 4 வயது சிறுவனுக்கு...

கெடா: புயலால் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்- கூரை இடிந்து விழுந்ததில் 4 வயது சிறுவனுக்கு தலையில் காயம்!

745
0
SHARE
Ad

அலோர் ஸ்டார்: கெடாவில் தொடர்ந்தார் போல பலத்த மழை மற்றும் காற்றால் ஏற்படும் சேதங்கள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், நேற்று வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் கூலிம் அருகே லுனாஸில் ஏற்பட்ட புயலின் போது வீடுகளின் கூரைகள் பறந்து இடிந்து விழுந்தன. 42-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட கிராமங்களில் கம்போங் பத்து 5, கம்போங் பெரேங்கான், கம்போங் சுங்கை லிமாவு மற்றும் தாமான் சாங் கன்சில் ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டதாக கூலிம் மாவட்ட பாதுகாப்பு அதிகாரி முகமட் பாசில் பாஹ்மி சைய்னி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“நான்கு வயது சிறுவனில் தலையில் கூரை இடிந்து விழுந்ததில் தலையில் சிறு காயங்களுக்கு ஆளாகி உள்ளார். கூலிம் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அவர் அனுப்பப்பட்டார்.”

“புதிய அறிக்கை வரும் போது காற்றால் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்” என்று பெர்னாமாவை இன்று வெள்ளிக்கிழமை தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.