Home கலை உலகம் ஆஸ்ட்ரோ வாராந்திர நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ வாராந்திர நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

914
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கொவிட்-19 பாதிப்புகளின் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஏப்ரல் 15 தொடங்கி, ஏப்ரல் 28 வரையில்மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டில் இருந்தபடியே கண்டு களிக்கும்படியான சிறந்த பொழுது போக்கு நிகழ்ச்சிகளை ஆஸ்ட்ரோ தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது.

அந்த வகையில் எதிர்வரும் வாரத்தில் ஆஸ்ட்ரோ அலைவரிசைகளில் ஒளிபரப்பாகவிருக்கும் சில நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்களை இங்கே காணலாம்:

ஞாயிறு, 12 ஏப்ரல்

சஜ்ஜான் சிங் ரங்ரூட் (முதல் ஒளிபரப்பு – ப்ரிமியர்) – பஞ்சாபி புத்தாண்டு (வைசாக்கி) சிறப்பு நிகழ்ச்சி

#TamilSchoolmychoice

Colors Hindi HD (அலைவரிசை 116), 10pm  | வீட்டில் பாதுகாப்பாக இருந்தபடி ஆஸ்ட்ரோ கோ’வில் பதிவிறக்கம்(ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: தில்ஜித் டோசன்ஜ், யோகிராஜ் சிங் & சுனந்தா சர்மா

பிரிட்டிஷ்-இந்திய ராணுவ அதிகாரி, சஜ்ஜான் சிங் மற்றும் பிற வீரர்கள் முதலாம் உலகப் போரின்போது ஏராளமானத் தடைகளை எதிர்கொள்கின்றனர். அதுகுறித்த திரைப்படம் இது.

திங்கள், 13 ஏப்ரல்

ஷாடா (முதல் ஒளிபரப்பு – ப்ரிமியர்) – பஞ்சாபி புத்தாண்டு (வைசாக்கி) சிறப்பு நிகழ்ச்சி

BollyOne HD (அலைவரிசை 251), 9pm  | வீட்டில் பாதுகாப்பாக இருந்தபடி ஆஸ்ட்ரோ கோவில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: தில்ஜித் டோசன்ஜ் & நீரு பஜ்வா

சாத்தா, என்ற புகைப்படக் கலைஞரைப் பற்றிய காதல், நகைச்சுவை கலந்த திரைப்படம் இது. தனது பெற்றோரின் அழுத்தங்களுக்கு மத்தியில் திருமணம் செய்து கொள்ள சரியான ஜோடியைத் தேடுகிறார். அவர் இறுதியாக தனது சரியான ஜோடியான வஞ்சலியைச் சந்திக்க, அவளைத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார். ஆனால், வஞ்சலியோ திருமணத்தின் மேல் நம்பிக்கையில்லாத ஒரு பெண். அவரை திருமணம் செய்யுமாறு அவளை சாத்தா சமாதானப்படுத்துவாரா?

திங்கள், 13 ஏப்ரல்

ரப்பா மேரேயா (முதல் ஒளிபரப்பு – ப்ரிமியர்) –  பஞ்சாபி புத்தாண்டு (வைசாக்கி) சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), 9pm  | வீட்டில் பாதுகாப்பாக இருந்தபடி ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: அவிந்தர் சிங், ஹேமந்த் ஷெர்கில், நவீந்தர் கோர், குர்விந்தர் சிங் & மல்கித் கோர்

தனது  தனித்து வாழும் தாயுடன் வசித்து வந்த சாஹிப் கோலாலம்பூருக்கு நிதித் தேவைகளுக்காக புறப்படுகிறார். ஒரு குருத்வாராவில் ஒரு சில இளைஞர்களால் பகடிவதைக்கு ஆளாகும் வேளையில், ஓர் அழகான பெண் அவர்பால் ஈர்க்கப்படுகிறாள்.

செவ்வாய், 14 ஏப்ரல்

தர்பார் (முதல் ஒளிபரப்பு – ப்ரிமியர்) –  சித்திரைப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி

சன் தொலைக்காட்சி (எச்டி அலைவரிசை 233 / அலைவரிசை 211), 6.30pm | வீட்டில் பாதுகாப்பாக இருந்தபடி ஆஸ்ட்ரோ கோவில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ரஜினிகாந்த், நயன்தாரா, & சுனில் ஷெட்டி

மும்பை காவல்துறை ஆணையர் ஆதித்யா அருணாச்சலத்தைப் பற்றிய ஒரு அதிரடி த்ரில்லர் திரைப்படம் தர்பார். தனது சுயத் தேவைக்காக பழிவாங்கும் விதமாக ஒரு குண்டர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான அஜயை வேட்டையாடுவதில் உறுதிக் கொள்கிறார் ஆதித்யா.

செவ்வாய், 14 ஏப்ரல்

மாமாங்கம் (முதல் ஒளிபரப்பு – ப்ரிமியர்) – சித்திரைப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்.டி. (அலைவரிசை 241), 9pm | வீட்டில் பாதுகாப்பாக இருந்தபடி ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: மம்முட்டி, உன்னி முகுந்தன் & அச்சுதன் பி. நாயர்

ஒவ்வொரு 12 வருடங்களுக்கும் ஒரு முறை கொண்டாடப்படும் மாமாங்கம் திருவிழா பற்றிய வரலாற்று அதிரடி திரைப்படம். திருவிழாவைச் ‘சொந்தமாக்க’ தங்கள் வீரர்களுடன் ஒருவருக்கொருவர் சண்டையிடும் வல்லுவக்கோனாதிரி மற்றும் ஜாமோரின் ஆகியோரைப் பற்றின சுவாரசியமானத் திரைப்படம் இது.

செவ்வாய், 14 ஏப்ரல்

கண்மணி அன்போடு காதலன் (முதல் ஒளிபரப்பு – ப்ரிமியர்) – சித்திரைப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), 9pm | வீட்டில் பாதுகாப்பாக இருந்தபடி ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: குபேன் மகாதேவன் & பாஷினி சிவகுமார்

காதலன் அதிக எடை கொண்ட, அன்பான பையன். அவன் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பான். இதற்கிடையில், கண்மணி சில மர்மமான காரணங்களுக்காக திருமணத்தைத் தவிர்த்து வந்தாள். அக்காரணங்கள் இருவரும் சந்திக்கும் தருவாயில் வெளிப்படுகிறது.

செவ்வாய், 14 ஏப்ரல்

பாரம் (முதல் ஒளிபரப்பு – ப்ரிமியர்) – சித்திரைப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை (அலைவரிசை 202), 9pm | வீட்டில் பாதுகாப்பாக இருந்தபடி ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஆதினி, அஜித், & அதுல்யா ஆனந்த்

66-வது தேசிய திரைப்பட விருதுகளில் வென்ற ஒரே தமிழ் திரைப்படமான, இத்திரைப்படம் தனது சகோதரி தேன்மொழி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தமிழகத்தில் வசிக்கும் காவலாளி கருப்புச்சாமியைப் பற்றிய கதையை மிக அழகாக சித்தரிக்கின்றது. ஒரு நாள், கருப்புச்சாமி ஒரு விபத்தில் சிக்க, அவரது இடுப்பு உடைகிறது. 8 நாட்களுக்குப் பிறகு, அவர் இறந்து கிடக்கிறார். அவர் எப்படி இறந்தார் என்பதே இத்திரைப்படத்தின் கதை அம்சமாகும்.

செவ்வாய், 14 ஏப்ரல்

வெண்பா (முதல் ஒளிபரப்பு – ப்ரிமியர்) – சித்திரைப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), 10.30pm | வீட்டில் பாதுகாப்பாக இருந்தபடி ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: யுவராஜ் கிருஷ்ணசாமி, அகல்யா மணியம், தேவகுரு சுப்பையா, நந்தினி சுகுமாரன், குபேன் மகாதேவன், சாந்தெய்னி சந்திரபோஸ் & ரூபனேஷ்

தென்னவன் மற்றும் கல்யாணியைப் பற்றிய உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட காதல் திரைப்படம். தென்னவனின் தாய் அவர் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். எனவே அவருக்காக சிறந்த மணப்பெண்ணைத் தேடுகிறார். ஆனால், தென்னவனோ பள்ளிப் பருவத்திலிருந்தே தான் நேசித்த கல்யாணியின் பால் கொண்ட ஆழமான காதலால் அவரது தாயார் தேர்ந்தெடுத்தப் பெண்களைத் தொடர்ந்து நிராகரித்து வந்தார். கல்யாணிக்கோ தென்னவனின் பால் எந்தவொரு உணர்வும் இல்லை. இதற்கிடையில், ஷீலா என்ற மற்றொரு பெண் தென்னவனின் மீது காதல் வயப்படுகிறாள். ஒரு நாள், கல்யாணியின் கைப்பை திருட்டுப்போக, தென்னவன் அதைக் கண்டுப்பிடிக்க அவளுக்கு உதவுகிறார். பதிலுக்கு, ஒரு விரைவான உரையாடலுக்காக தன்னுடன் ஒரு மணிநேரம் செலவிடும்படி அவளிடம் கேட்கிறார். தென்னவன் தன்னைத் திருமணம் செய்துக் கொள்ளுமாறு கல்யாணியின் மனதை வெல்வாரா?

செவ்வாய், 14 ஏப்ரல்

#வீட்டில்இருங்கள் (#vittilirunggal!) ராகாவின் புத்தாண்டு இசை நிகழ்ச்சி

ராகா முகநூல், 2pm

கலைஞர்கள்: சந்தேஷ், சித்தார்த்தன், ஷாமினி, காயத்ரீ தண்டபாணி, லாரன்ஸ் சூசை, புனிதா ராஜா, ராபிட் மேக், ஹேவோக் பிரதர்ஸ், கௌரி & எம்.கே.முத்து குமரன்

ராகா ரசிகர்கள் சிறப்பு புத்தாண்டை இவ்வருடமும் அனுபவிக்க முடியும். இந்த ஆண்டு, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (MCO) மற்றும் COVID-19 pandemic தொற்றுநோய்க்கு மத்தியில் புத்தாண்டு கொண்டாடப்படும். மலேசியர்களைத் தொடர்ந்து மகிழ்விக்கவும் #வீட்டில்இருப்பதை ஊக்குவிக்கவும், ராகா Good day பால் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து உள்ளூர் கலைஞர்கள் வீட்டில் இருந்தவாரே படைப்புகளை வழங்கி சிறப்பிக்கும் #வீட்டில்இருங்கள் (#vittilirunggal!’) எனும் முதல் முகநூல் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

புதன், 15 ஏப்ரல்

அச்சம்மக்கு ஒரு விசுகனி (ப்ரிமியர்) – மலையாள புத்தாண்டு (விஷு) சிறப்பு நிகழ்ச்சி


ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), 9pm | வீட்டில் பாதுகாப்பாக இருந்தபடி ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: டத்தின்ஸ்ரீ ஷைலா நாயர், ஆனந்தா, & கீர்த்திகா நாயர்

பல பிளவுகளுக்குப் பின் ஒன்றினைந்த குடும்பத்தை பற்றிய கதை இது. ஒரு காலத்தில் இழந்த மகிழ்ச்சியை மீண்டும் எழுப்புவதிலும் ஒன்றிணைப்பதிலும்  பேரக்குழந்தைகளின் முக்கியப் பங்கினை இக்கதை மிக அழகாக சித்தரிக்கின்றது.

வியாழன், 16 ஏப்ரல்

பாலா (முதல் ஒளிபரப்பு – ப்ரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), 9pm  | வீட்டில் பாதுகாப்பாக இருந்தபடி ஆஸ்ட்ரோ கோ வழி பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஆயுஷ்மான் குர்ரானா, பூமி பெட்னேகர் & யாமி கௌத்தம்

முன்கூட்டிய வழுக்கையால் அவதிப்படும் பாலா என்ற இளைஞரைப் பற்றிய நகைச்சுவைத் திரைப்படம் இது. அவரது பாதுகாப்பற்ற தன்மையால் அவரது திருமணம் அச்சுறுத்தலுக்கு ஆளான பின்னர் அவர் ஒரு வழக்கறிஞரின் உதவியை நாடுகிறார்.

வியாழன், 16 ஏப்ரல்

அசுரகுரு

Astro First (அலைவரிசை 480)

நடிகர்கள்: விக்ரம் பிரபு, யோகி பாபு, மனோபாலா &, மஹிமா நம்பியார்

சிறுவயதிலிருந்தே பணத்தின் மீது வெறி கொண்ட தொழில்நுட்ப ஆர்வமுள்ள திருடனாக மாறிய சக்தியைப் பற்றி ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் இது. இருப்பினும், ஒரு காவல் அதிகாரி அவரைக் கைதுசெய்த பிறகு அவரது வாழ்க்கை ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகிறது.

வெள்ளி, 17 ஏப்ரல்

ராஜாவுக்குச் செக் (முதல் ஒளிபரப்பு – ப்ரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்.டி. (அலைவரிசை 241), 9pm | வீட்டில் பாதுகாப்பாக இருந்தபடி ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: சேரன், ஸ்ருஷ்டி டாங்கே & சாராயு மோகன்

க்ளீன் லெவின் நோய்க்குறியால் அவதிப்படும் சிபி-சிஐடி அதிகாரியான ராஜா செந்தூர் பாண்டியன் பற்றிய ஒரு திரில்லர் திரைப்படம். தனது பதின்ம வயது மகள் காணாமல் போயிருப்பதைக் கண்டுபிடிப்பதற்காக அவர் வீடு திரும்புகிறார். அவ்வேளையில், அவரால் சிறையில் அடைக்கப்பட்ட நான்கு குற்றவாளிகள் அவரைப் பழிவாங்கும் நோக்கத்தில் தன் மகளைக் கடத்திச் சென்றுள்ளதை உணர்கிறார்.