Home One Line P2 தமிழகத்திலும் 14 நாட்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாடு நீட்டிக்கப்படலாம்

தமிழகத்திலும் 14 நாட்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாடு நீட்டிக்கப்படலாம்

1342
0
SHARE
Ad

சென்னை – இந்தியாவில் விதிக்கப்பட்ட 21 நாட்களுக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை எதிர்வரும் ஏப்ரல் 14-ஆம் தேதியோடு முடிவுக்கு வரவிருக்கும் நிலையில் மேலும் 14 நாட்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசு, கொவிட்-19 விவகாரம் தொடர்பில் நியமித்த 19 நிபுணர்களைக் கொண்ட குழுவும் நடப்பு நிலைமைகள் குறித்து ஆய்வு செய்து நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்க சிபாரிசு செய்துள்ளது.

#TamilSchoolmychoice

நாளை சனிக்கிழமை (ஏப்ரல் 11) பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் காணொளி வழி நேரலையாக பேச்சு வார்த்தை நடத்தவிருக்கிறார். அதைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவையும் நாளை மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடவிருக்கிறது.

அதன் பின்னர் தமிழ் நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீதான கால நீட்டிப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தமிழ் நாடு மாநிலத்தில் 77 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 911-ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில் ஒடிசா மாநிலம் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நீட்டிக்கும் முதல் மாநிலமாக முன்வந்துள்ளது.

இந்தியா முழுவதிலும் இதுவரையில் 6,761 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 206 மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.