Home கலை உலகம் ஆஸ்ட்ரோவின் ‘டுவிஸ்ட்டு’ – உள்ளூர் பிரபலங்களைக் கொண்ட புதிய ஆஸ்ட்ரோ குறுந் தொடர்

ஆஸ்ட்ரோவின் ‘டுவிஸ்ட்டு’ – உள்ளூர் பிரபலங்களைக் கொண்ட புதிய ஆஸ்ட்ரோ குறுந் தொடர்

1147
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் இன்று சனிக்கிழமை ஏப்ரல் 11 முதல் மாலை 4 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) மற்றும் ஆஸ்ட்ரோ கோ வழி பிரபலமான உள்ளூர் பிரபலங்களைக் கொண்ட தனித்துவமிக்க, ஒரு புதிய குறுந் (மினி) தொடரான ‘டுவிஸ்ட்டு’- என்ற தொடரைக் கண்டு மகிழலாம். இப்புத்தம் புதிய குறுந் தொடர் ஒவ்வொரு நாளும் புதிய அத்தியாயத்துடன் மலரவுள்ளது.

ஆர்.எம்.எஸ்.சாரா – கவிநந்தன் – மதன்

‘என் வீட்டுத் தோட்டத்தில்’ மற்றும் ‘சுகமாய் சுப்புலட்சுமி’ இயக்குனர் கார்த்திக் ஷாமலன் கைவண்ணத்தில் மலர்ந்த ‘டுவிஸ்ட்டு’ நன்கு அறியப்பட்ட மலேசியத் திரைப்பட ஆளுமைகளின் ஆக்கபூர்வமானக் கதைச் சொல்லும் திறன்களைச் சோதனைக்கு உட்படுத்துகிறது:

  • ‘புலனாய்வு’ புகழ் ஷாலினி பாலசுந்தரம், இயக்குனர்;
  • பால கணபதி வில்லியம், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர்;
  • ‘வெண்பா’ புகழ் கவி நந்தன், இயக்குனர்;
  • ‘Love in 12 Hours’ குறும்பட இயக்குனர் மதன்;
  • ஆர்.எம்.எஸ் சரா, இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்;
  • குபேன் மகாதேவன், நடிகர்; மற்றும்,
  • டேனேஸ் குமார், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் தொகுப்பாளர்.
பாலகணபதி வில்லியம் – குபேன் மகாதேவன் – டெனேஸ் குமார்

ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு புகழ்பெற்ற உள்ளூர் கலைஞர்களும் பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் அற்புதமான திருப்பங்கள் (‘டுவிஸ்ட்டு’) கொண்ட கதைகளைக் கூறுவர். அத்தியாய திருப்பங்களில் புதிய கதாபாத்திர அறிமுகங்கள் உட்பட பல சிறப்பம்சங்கள் உள்ளடங்கும் – கதாநாயகர்கள் மற்றும் வில்லன்கள், சஸ்பென்ஸ் கூறுகள், அறிவியல் புனைகதை அம்சங்கள், நிஜ வாழ்க்கை இணைப்புகள் மற்றும் பல அம்சங்கள் இந்தத் தொடரின் கதையம்சத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. பின்வரும் ஒவ்வொரு அத்தியாயத்தையும் புதிய கலைஞர்கள் ஏற்கனவே கூறப்பட்ட முழுமையற்ற கதை டுவிஸ்ட்டிலிருந்து ஆக்கப்பூர்வமாகத் தொடர வேண்டும்.

ஷாலினி பாலசுந்தரம்
#TamilSchoolmychoice

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (MCO) போது மலேசியர்களை பாதுகாப்பாக வீட்டில் இருப்பதை ஊக்குவிக்க ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து உற்சாகமான மற்றும் பொருத்தமான உள்ளடக்கத்தை வழங்கி வருகிறது.

அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக ‘டுவிஸ்டு’ குறுந்தொடர் அமைகிறது.