Home One Line P1 கொவிட்-19: மரணமுற்றவருக்கான மதச் சடங்குகள் உடல் மூடப்பட்டிருக்கும் பைகளின் மேற்பரப்பில் செய்ய வேண்டும்!

கொவிட்-19: மரணமுற்றவருக்கான மதச் சடங்குகள் உடல் மூடப்பட்டிருக்கும் பைகளின் மேற்பரப்பில் செய்ய வேண்டும்!

565
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்பால் இறந்தவர்களின் தோலின் மேற்பரப்பில் அக்கிருமி தங்கியிருப்பதை பிரேத பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.

இறுதிச் சடங்கின் போது எந்தவொரு மதச் சடங்குகளும் கொவிட் -19 பாதிக்கப்பட்டவருக்கு உடல் முடப்பட்டிருக்கும் பைகளின் மேற்பரப்பில் மட்டுமே செய்ய முடியும் என்று சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய பகுப்பாய்வு மூலம் உடலின் மேற்பரப்பில் கொவிட் -19 வைரஸ் கண்டறியப்பட்டது. ” என்று அவர் கூறினார்.

மலேசிய பத்வா மன்றம் முன்னதாக மார்ச் 15-ஆம் தேதி ஒரு மாநாட்டில் முஸ்லிம்களுக்கான எந்தவொரு இறுதி சடங்கிலும் இறந்தவர்களை குளிப்பாட்டும் வழக்கமான நடைமுறைவிட “தய்யமும்” அல்லது புழுதி மண்ணைப் பயன்படுத்தி மத சுத்திகரிப்பு செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளது.

இதேபோல், புத்தம், கிறித்துவம், இந்து மதம், சீக்கியம் மற்றும் தாவோயிசம் ஆகியவற்றின் மலேசிய ஆலோசனைக் குழுவும் மார்ச் 16-ஆம் தேதியன்று எந்த மதச் சடங்குகளும் இதேபோல் உடல் பைகளில் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்று முடிவு செய்தன.