Home அரசியல் முக்ரிஸ் மகாதீர் மந்திரி பெசார் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் தே.மு.விற்கு சாதகமாக வாக்குகள் திசை திரும்பும்

முக்ரிஸ் மகாதீர் மந்திரி பெசார் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் தே.மு.விற்கு சாதகமாக வாக்குகள் திசை திரும்பும்

565
0
SHARE
Ad

Mukhriz-Mahathir---Sliderகெடா,ஏப்ரல் 11- கெடா மாநிலத்தில் தற்போது ஜெர்லுன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் முக்ரிஸ் மகாதீர் கெடா மாநிலத்தின் மந்திரி பெசார் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டால், அந்த மாநிலத்திலுள்ள நடுநிலை வாக்காளர்களின் வாக்குகள் தேசிய முன்னணிக்கு சாதகமாக திசை திரும்பும் என்று மலேசிய கினி இணையத் தள செய்தி ஒன்று கூறுகின்றது.

பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் வழி மந்திரி பெசார் வேட்பாளராக முக்ரிஸ் நிறுத்தப்பட்டால் நடுநிலை வாக்காளர்களான 25 விழுக்காட்டினரின் வாக்குகள் நிச்சயம் தே.மு. பக்கம் திரும்பும் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் நன்கு அறிமுகமானவராக இருப்பதாலும், துணையமைச்சர் பதவியில் தனது தலைமைத்துவ சிறப்புக்களை வெளிக்காட்டி இருப்பதாலும், முக்ரிசுக்கு பரவலான ஆதரவு வலுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

முன்னாள் பிரதமர் மகாதீரின் புதல்வர் என்ற அடிப்படையிலும் அவருக்கு வாக்காளர்களின் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது கெடா மாநில சட்டமன்றத் தொகுதிகளில் 20 மக்கள் கூட்டணி வசம் இருக்கிறது. 14 சட்டமன்றத் தொகுதிகள் தேசிய முன்னணியிடம் இருக்கிறது.

மேலும் பாஸ் மாநில மந்திரி பெசார் அஸிஸான் துன் ரசாக்  ஒரு பலவீனமான மந்திரி பெசாராக கருதப்படுவதால் அவரால் பாஸ் கட்சி பக்கமும், மக்கள் கூட்டணி பக்கமும் வாக்குகளை திருப்ப முடியாது எனவும் ஆய்வுகள் காட்டுவதாக மலேசியா கினி செய்தி  சுட்டிக் காட்டியுள்ளது.

நடுநிலை வாக்காளர்கள் 25 விழுக்காடு இருப்பதால் தேசிய முன்னணியின்  இந்த வியூகத்தின் மூலம்  நிச்சயம் கெடா மாநிலத்தை கைப்பற்ற முடியும் என்று தேசிய முன்னணி  தலைமைத்துவம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அந்த செய்தி மேலும் தெரிவித்துள்ளது.