Home One Line P2 விமான நிறுவனங்கள் 314 பில்லியன் டாலர்கள் வருமானம் இழப்பு

விமான நிறுவனங்கள் 314 பில்லியன் டாலர்கள் வருமானம் இழப்பு

583
0
SHARE
Ad

கொவிட்-19 பாதிப்புகளால் உலகம் முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கும் விமான  நிறுவனங்கள் 2020-ஆம் ஆண்டில் சுமார்  314 பில்லியன் டாலர்கள் வருமானத்தை இழக்கும் என அனைத்துலக வான் போக்குவரத்து கூட்டமைப்பு (International Air Transport Association – IATA) அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள சுமார் 290 விமான நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்பு இதுவாகும்.

#TamilSchoolmychoice

இந்த வருமான இழப்பு 55 விழுக்காடு வீழ்ச்சியாகும்.

சுமார் 3 வாரங்களுக்கு முன்னர் இத்தகைய இழப்பு 252 பில்லியன் டாலர்களாக – அதாவது 44 விழுக்காடு வீழ்ச்சியாக – இருக்கும் என மதிப்பிடப்பட்ட வேளையில் தற்போது அந்த இழப்பு மேலும் கூடுதலாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் விமானப் பயணங்களின் எண்ணிக்கை 80 விழுக்காடு குறைந்து விட்டன.