Home One Line P2 ஏப்ரல் 29 முதல் மீண்டும் விமான சேவைகளைத் தொடங்குகிறது ஏர் ஆசியா

ஏப்ரல் 29 முதல் மீண்டும் விமான சேவைகளைத் தொடங்குகிறது ஏர் ஆசியா

645
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஏப்ரல் 28-ஆம் தேதியோடு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் முதல் கட்டமாக தனது உள்நாட்டு சேவைகளை ஏர் ஆசியா தொடங்கவிருக்கிறது. எனினும் இதற்கான அரசாங்க அனுமதிக்காக அது இன்னும் காத்திருக்கிறது.

தொடர்ந்து அண்டை நாடுகளுக்கும் தனது சேவைகளை ஏர் ஆசியா விரிவுபடுத்தவிருக்கிறது. தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்சுக்கான விமான சேவைகளை மே 1-ஆம் தேதியும் இந்தியாவுக்கான சேவைகள் மே 4-ஆம் தேதியும், இந்தோனிசியாவுக்கான சேவை மே 7-ஆம் தேதியும் தொடங்கவிருக்கின்றன.

#TamilSchoolmychoice

மற்ற நாடுகளுக்கான சேவைகள் கட்டம் கட்டமாக மீண்டும் அறிமுகமாகும் என்றும் மற்ற நாடுகளில் கொவிட்-19 மேம்பாடுகள், நடமாட்டக் கட்டுப்பாடு ஆணைகளின் செயலாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் ஏர் ஆசியாவின் விமான சேவைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

ஏர் ஆசியாவின் இணையத் தளமும் செயலியும் மீண்டும் செயல்படத் தொடங்கி விட்டன என்றும் தெரிவித்த ஏர் ஆசியா மற்ற சேவைகள் கட்டம் கட்டமாகத் தொடங்கப்படும் என்றும் கூடியவிரைவில் அனைத்து சேவைகளும் முழுமையாக இயங்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.