ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர் அஸ்மாடி அப்துல் அசிஸ் கூறுகையில், 19 முதல் 44 வயதுடைய இந்திய நாட்டினர் பேராக் காவல் துறை தலைமையகத்தில் இரவு 8.50 மணியளவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
“ஈப்போ பாராட்டில் கொவிட் -19 ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், உணவகத்தில் இருந்து உரத்த சத்தம் கேட்டதுடன், கதவைத் திறந்துள்ளனர். 10 ஆண்கள் மது அருந்துவதையும், சாப்பிடுவதையும் கண்டறிந்தனர்” என்று பெர்னாமாவிடம் அவர் கூறினார்.
அவர்களது வீடு கடையிலிருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் அமைந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், உணவகத்தின் வணிக உரிமத்தையும், மூன்று மது பாட்டில்களையும் காவல் துறை பறிமுதல் செய்ததாகத் தெரிவித்துள்ளது.
“கைது செய்யப்பட்ட அனைவருமே நாட்டில் கொவிட்-19 பரவியதைத் தொடர்ந்து அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை தெரிந்து வைத்திருப்பதை ஒப்புக் கொண்டனர்” என்று அவர் கூறினார்.