கோலாலம்பூர்: செலாயாங்கில் உள்ள கோலாலம்பூர் மொத்த சந்தை விற்பனை மையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு, வெளிநாட்டவர்கள் இப்பகுதியிலிருந்து தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காகவே முன் அறிவிப்பு இல்லாமல் செய்யப்பட்டதாக கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் எட்மண்ட் சந்தாரா குமார் தெரிவித்தார்.
மஸ்ஜிட் இந்தியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட போது, அதிகமான வெளிநாட்டவர்கள் வெளியே தங்கி விட்டதாக அவர் தெரிவித்தார்.
“காவல் துறையினர், இராணுவம் மற்றும் குறிப்பாக சுகாதார அமைச்சு, நடமாட்டக் கட்டுப்பாடு செயல்படுத்தப்படுவதற்கு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்னர் இப்பகுதியில் உளவுப் பணியை மேற்கொண்டனர்.” என்று அவர் கூறினார்.