Home One Line P1 நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை காலக்கட்டத்தில் ஊழல் தொடர்பாக மூவர் கைது!- எம்ஏசிசி

நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை காலக்கட்டத்தில் ஊழல் தொடர்பாக மூவர் கைது!- எம்ஏசிசி

392
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதிலிருந்து மூன்று நபர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தடுத்து வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், 286 தகவல்களையும், ஊழல் தொடர்பான 22 புகார்களையும் பெற்றுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

அவர்களில் இருவர் பாகிஸ்தானியர்கள் சபாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இரண்டாவது சம்பவம் ஜோகூரில் நடந்தது என்றும் எம்ஏசிசி இன்று ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

“முதல் வழக்கில், சாபாவின் கோத்தா கினபாலுவில் இரண்டு பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர். சாலை தடுப்பில் ஈடுபட்டபோது சந்தேக நபர்கள் சிகரெட்டுகளை கடத்தியதாக நம்பப்படுவதால் குற்றம் சாட்டப்படுவதைத் தவிர்ப்பதற்காக 7,000 ரிங்கிட் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றனர்.”

“இரண்டாவது வழக்கில், ஒரு வணிக வளாகத்தை சட்டவிரோதமாக திறந்து வைத்ததற்காக தவறான குற்றச்சாட்டுக்காக குலுவாவாங்கில்  500 ரிங்கிட்டை அதிகாரிக்கு இலஞ்சம் கொடுத்ததாக ஒரு வியாபாரி கைது செய்யப்பட்டார்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, மார்ச் 18 முதல் நேற்று வரை ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மோசடி தொடர்பான 286 தகவல்களும் 22 புகார்களும் அந்த ஆணையத்திற்குக்  கிடைத்ததாக அது கூறியுள்ளது.