Home One Line P1 1000-க்கும் மேற்பட்ட வளாகங்களில் அடிப்படை தேவைப் பொருட்களின் விற்பனைகள் கண்காணிக்கப்படும்!

1000-க்கும் மேற்பட்ட வளாகங்களில் அடிப்படை தேவைப் பொருட்களின் விற்பனைகள் கண்காணிக்கப்படும்!

525
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1,000- க்கும் மேற்பட்ட வளாகங்களில் அடிப்படை தேவைப் பொருட்களின் விற்பனையை உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் விவகார அமைச்சு கண்காணித்து வருவதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

ரம்லான் மாதம் உட்பட நாடு முழுவதும் உள்ள மக்களின் தேவையைத் தக்கவைக்க அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பிற அடிப்படைத் தேவைகள் போதுமானவையாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த காரணத்திற்காக, விற்பனை வளாகங்கள் உள்ளிட்ட பிற பொருட்கள் வாங்கும் இடங்களில் கூடல் இடைவெளியை மக்கள் தொடர்ந்து பின்பற்றும் அதே வேளையில், எந்தவொரு வளாகத்திலும் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் கூட்டமாக செல்ல மாட்டார்கள் என்று தாம் நம்புவதாகத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அதற்காக பொதுமக்கள் திட்டமிட வேண்டுமென்றும், அவசரப்படத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.