Home One Line P2 பொருளாதார வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த சீனாவில் உள்ளூர் பயனீட்டாளர்களுக்காக இணைய விற்பனை தொடங்கவுள்ளது!

பொருளாதார வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த சீனாவில் உள்ளூர் பயனீட்டாளர்களுக்காக இணைய விற்பனை தொடங்கவுள்ளது!

518
0
SHARE
Ad

பெய்ஜிங்: முதல் காலாண்டில் சீன நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 6.8 விழுக்காடு சுருங்கிய பின்னர், சீனா இணைய விற்பனை விழாவைத் தொடங்கவுள்ளது என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்விழா, அதன் உள்நாட்டு செலவை விரிவாக்க மற்றும் கொவிட்-19 தொற்றால் அதன் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததை அடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று வணிக அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

100- க்கும் மேற்பட்ட இணைய விற்பனை நிறுவனங்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றன. விவசாய பொருட்கள் முதல் மின்னணு சாதனங்கள் வரை பல வகையான தரமான பொருட்களை விற்பனை செய்யப்பட உள்ளன.

#TamilSchoolmychoice

பயனீட்டாளர்களுக்கு செங்குத்தான தள்ளுபடிகள் மற்றும் சிறந்த சேவைகள் வழங்கப்பட உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் பரவி வரும் கொரொனாவைரஸ் தொற்றுநோய் வெளிப்புற தேவையை மந்தப்படுத்தியதால், சீனா தனது பொருளாதாரத்தை புதுப்பிக்க உள்நாட்டு பயனீட்டாளர்கள் மீது நம்பிக்கையைச் செலுத்தியுள்ளது.

இந்த விற்பனை விழா ஏப்ரல் 28 முதல் மே 10 வரை நடக்கிறது.