Home One Line P2 ஆஸ்ட்ரோ வாராந்திர இந்தித் திரைப்படங்கள் குறித்த சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ வாராந்திர இந்தித் திரைப்படங்கள் குறித்த சிறப்பம்சங்கள்

599
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவால் இல்லங்களில் முடங்கிக் கிடக்கும் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களை மகிழ்விக்க ஆஸ்ட்ரோ தனது கலர்ஸ் எச்.டி. மற்றும் பாலிஒன் எச்.டி. அலைவரிசைகளில் ஒளியேற்றவிருக்கும் சிறப்பு இந்தித் திரைப்படங்கள் குறித்த சிறப்பம்சங்கள் பின்வருமாறு: ளை வெளியிட்டுள்ளது.

மர்ஜாவான் இந்தித் திரைப்படம் (முதல் ஒளிபரப்பு – ப்ரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), 9pm  | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: தாரா சுத்தாரியா, சித்தார்த் மல்ஹோத்ரா, ரித்திஷ் தேஷ்முக் & ராகுல் ப்ரீத் சிங்

#TamilSchoolmychoice

கும்பல் தலைவரின் தந்தையிடம் அதிக ஆதரவைப் பெற்றதால் பொறாமையினால் அக்கும்பல் தலைவர், ரகு மற்றும் சோயாவின் மகிழ்ச்சியான வாழ்க்கையில் குறுக்கிட்டு அவர்களின் உலகத்தைத் தலைகீழாக மாற்றி அழிக்கிறார்.

ஞாயிறு, 10 மே

கபி குஷி கபி காம் –  அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி

கலர்ஸ் இந்தி எச்.டி. (Colors Hindi HD) அலைவரிசை 116 – பிற்பகல் 2 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், ஷாருக்கான், காஜோல், ரித்திக் ரோஷன், கரீனா கபூர் & ராணி முகர்ஜி

பணக்கார தம்பதியினரின் வளர்ப்பு மகனான, ராகுல் சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனது குடும்பத்துடன் இணைகிறான். ஒரு நடுத்தர வர்க்கப் பெண்ணை மணந்தப் பின்னர் அவனை மறுத்து ஒதுக்கிறார் அவனது வளர்ப்புத் தந்தை. எனவே, தன் மனைவியுடன் ஒரு புதிய வாழ்க்கையைத் துவங்க லண்டனுக்குச் செல்கிறான், ராகுல். ஒரு சில வருடங்களுக்குப் பிறகு, அவனது தம்பி ரோஹன் அவனைக் கண்டுபிடித்து மீண்டும் குடும்பத்துடன் ஒன்றிணைக்கிறான்.

மெயின் ஹூன் நா –  அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி

கலர்ஸ் இந்தி (Colors Hindi HD) – அலைவரிசை 116), இரவு 10.00 மணி | ஆஸ்ட்ரோ கோவில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஷாருக் கான், சயீத் கான், சுஷ்மிதா சென், அமிர்தா ராவ் & சுனில் ஷெட்டி

தனது தனிப்பட்ட மற்றும் தொழில் பணியை நிறைவேற்ற கல்லூரி மாணவர் வேடத்தில் இரகசியமாக செல்கிறார், இராணுவ மேஜர் ஒருவர். ஒரு பயங்கரமான தீவிரவாதியால் தாக்கப்படுவதிலிருந்து தனது ஜெனரலின் மகளை பாதுகாத்து காப்பாற்றுவதே அவரது தொழில் நோக்கமாகும். மேலும், பிரிந்த தன் சகோதரரைப் பற்றி கண்டுபிடிப்பதே அவரது தனிப்பட்ட நோக்கமாகும்.