Home One Line P2 மலேசியாவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் திருமூர்த்தி ஐ.நா.நிரந்தரப் பிரதிநிதியாக நியமனம்

மலேசியாவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் திருமூர்த்தி ஐ.நா.நிரந்தரப் பிரதிநிதியாக நியமனம்

1164
0
SHARE
Ad

புதுடில்லி – மலேசியாவுக்கான இந்தியத் தூதராக கடந்த தவணையின்போது சிறப்பாகப் பணியாற்றி மலேசிய இந்தியர்களின் ஒருமுகமான பாராட்டுகளைப் பெற்றவர் டி.எஸ்.திருமூர்த்தி.

தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழரான இவர் மலேசியத் தூதராகப் பணியாற்றிய காலத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலேசிய வருகையைச் சிறப்பாகக் கையாண்டு அனைத்துத் தரப்புகளின் பாராட்டுகளையும் பெற்றார்.

தொடர்ந்து தனது பதவிக் காலம் முடிவடைந்ததும் இந்தியா திரும்பி இந்திய வெளியுறவு அமைச்சின் பொருளாதார உறவுகளுக்கான செயலாளராக நியமிக்கப்பட்டு பணியாற்றிக் கொண்டிருந்தார்.

#TamilSchoolmychoice

தற்போது அவர் இந்திய அரசாங்கத்தின் சார்பில் நியூயார்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கான நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.