Home One Line P1 கொவிட்-19 பிறழ்வின் 30 திரிபுகளில் ஒன்று தீவிரமாக செயல்படக்கூடும்!- சுகாதார அமைச்சு

கொவிட்-19 பிறழ்வின் 30 திரிபுகளில் ஒன்று தீவிரமாக செயல்படக்கூடும்!- சுகாதார அமைச்சு

581
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்-19 குறித்து சுகாதார அமைச்சகம் நடத்திய ஆய்வில், வைரஸ் பிறழ்வின் 30 திரிபுகளில் ஒன்று மிகவும் தீவிரமாக செயல்படக்கூடும் மற்றும் 120 பிற நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டது.

மரபணு குறியீடு 15- இல் பிறழ்வு கண்டறியப்பட்ட நிலையில், இது 26- வது சம்பவம் சம்பந்தப்பட்டதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

“எனவே, இந்த 26- வது நபர் பிறழ்வு காரணமாக (நோயாளி) பாதிக்கப்பட்டிருக்கலாம். எனவே, புதிய பிறழ்வுகள் சம்பந்தப்பட்ட தனிநபர்களிடையே தொற்று அல்லது பரவுதல் அடிப்படையில் மிகவும் தீவிரமானவை,” என்று புதன்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஏற்கனவே இந்த அபாயமான வைரஸை தனிமைப்படுத்தியதாக அவர் கூறினார்.

இருப்பினும், வெவ்வேறு திரிபுகள் உள்ளதா என்பதைப் கண்டுப்பிடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

“நம் சம்பவங்கள் சீனா வுஹானில் உள்ள ‘சி’ போன்றவையாகும்.”

“ஆனால், நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், வெளிநாடுகளிலிருந்து திரும்பிய நோயாளிகளில் மீது ஆய்வுகளை மேற்கொள்வது. எனவே, நாம் இந்த வைரஸை தனிமைப்படுத்தி ஆய்வை மேற்கொண்டு வருகிறோம், என்று அவர் கூறினார்.