Home One Line P1 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: கைது செய்யப்பட்ட சட்டவிரோத குடியேறிகள் சொந்த நாட்டிற்கு அனுப்பப்படுவார்கள்!

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: கைது செய்யப்பட்ட சட்டவிரோத குடியேறிகள் சொந்த நாட்டிற்கு அனுப்பப்படுவார்கள்!

689
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சட்டவிரோத குடியேறிகளையும் தங்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப அரசாங்கம் தயாராக உள்ளது.

தற்போதைக்கு அவர்களை தடுப்புக்காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு சிறைகளில் அடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பகுதியில் உள்ள சட்டவிரோத குடியேறிகள் டிப்போவுக்கு அனுப்பப்படுவார்கள், மேலும் நாங்கள் 11 சிறைகளையும் வழங்குகிறோம்.”

#TamilSchoolmychoice

“சமாளிக்க முடியாவிட்டால், நாங்கள் அவர்களை உள்துறை அமைச்சகத்தின் கீழ் சிறப்பு சிறைகளில் வைப்போம். ” என்று அவர் கூறினார்.