பெய்ஜிங்: சீனா வுஹானில் மருத்துவமனையில் கொவிட்-19 பாதிப்பால் சேர்க்கப்பட்ட நோயாளிகள் இல்லை என்ற செய்தியை உலக சுகாதார அமைப்பு வெள்ளிக்கிழமை வரவேற்றது. தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான அதன் அயராத முயற்சிகளை பாராட்டியதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூன்று மாதங்களுக்கும் மேலாக கடுமையான போராட்டத்திற்குப் பிறகு, கொரொனா பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்ட மத்திய சீன நகரமான வுஹான் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனைகளில் உள்ள எந்த கொவிட்-19 சம்பவங்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
“கடுமையான சம்பவங்கள் இல்லை. வுஹானில் அதிகமான நோயாளிகள் இல்லை என்பது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி” என்று உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால திட்டத்தின் தொழில்நுட்ப முன்னணி தலைவர் மரியா வான் கெர்கோவ் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.
“எனவே இந்த சாதனைக்கு வாழ்த்துகள்,” என்று அவர் கூறினார்.
டாக்டர் வான் கெர்கோவ், வுஹானில் உள்ள மக்களின் “அயராத முயற்சிகளை” பாராட்டினார் – “சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமல்ல, தங்கள் வீடுகளில் தங்கியிருந்தவர்களும், பொது சுகாதார நடவடிக்கைகளை கடைப் பிடித்தவர்களுக்கும் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.