Home One Line P1 புதிய பாதிப்புகள் 105 ஆக உயர்ந்தன; மரணங்கள் நிகழவில்லை

புதிய பாதிப்புகள் 105 ஆக உயர்ந்தன; மரணங்கள் நிகழவில்லை

602
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – இன்று சனிக்கிழமை (மே 2) நண்பகல் வரை மலேசியாவில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எனினும் யாரும் கடந்த 24 மணி நேரத்தில் மரணமடையவில்லை என்ற ஆறுதலான செய்தியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து கொவிட்-19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,176 ஆக உயர்ந்திருக்கிறது.

புதிய பாதிப்புகளில் 11 பேர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களாவர்.

#TamilSchoolmychoice

கடந்த 24 மணி நேரத்தில் 116 பேர்கள் கொவிட்-19 பாதிப்பிலிருந்து விடுபட்டு, இல்லம் திரும்பியிருக்கின்றனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,326 ஆக உயர்ந்திருக்கிறது என்று சுகாதாரத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

தற்போது நாடு முழுமையிலும் 1,747 பேர்கள் மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 31 பேர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. 12 பேர்கள் சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.