Home One Line P1 அஸ்மின் அலியைச் சாடிய அம்னோ தலைவர்

அஸ்மின் அலியைச் சாடிய அம்னோ தலைவர்

659
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இணைந்து அரசாங்கம் அமைத்திருந்தாலும் அம்னோ தலைவர்களுக்கும் பெர்சாத்து தலைவர்களுக்கும் இடையிலான சாடல்களும், மோதல்களும் அடிக்கடி நிகழ்கின்றன.

மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல் அனைத்துலக வாணிப, தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலி பொருளாதார மீட்சி என்ற நோக்கத்தோடு, கட்டுப்பாட்டுத் தளர்வுகளின் மூலம் மீண்டும் வணிகங்களைத் திறந்து விட்டிருப்பதை காலிட் நோர்டின் சாடியிருக்கிறார். காலிட் ஜோகூரின் முன்னாள் மந்திரி பெசாரும் அம்னோ உதவித் தலைவரும் ஆவார்.

இதன் காரணமாகவே பல மாநிலங்கள் தளர்வுகளை அமுல்படுத்துவதிலிருந்து பின்வாங்கியிருக்கின்றன என்றும் காலிட் கூறினார்.

#TamilSchoolmychoice

“இது மூத்த அமைச்சர் என அங்கீகரிக்கப்பட்டிருக்கும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரின் தவறான அணுகுமுறையாகும். முதலில் அனைத்து மாநில அரசுகளுடனும் கலந்தாலோசித்து, விவாதித்து, ஒருமுகமான முடிவை அவர் எடுத்திருக்க வேண்டும்” என்றும் காலிட் கூறியிருக்கிறார்.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்சி பெறச் செய்ய வியூகம் அமைப்பதிலும், கருத்துகளை ஒருங்கிணைப்பதிலும் தலைமைத்துவ பலவீனம் அமைச்சருக்கு இருப்பதையே இது காட்டுகிறது” என்றும் காலிட் சாடியிருக்கிறார்.

நேரடியாகப் பெயர் குறிப்பிடாவிட்டாலும், காலிட், அஸ்மின் அலியையே குறிவைத்துச் சாடியிருக்கிறார் என ஊடகங்களும் தெரிவித்திருக்கின்றன.