Home One Line P2 ரிஷி கபூருக்கு திரைப்படங்கள் மூலம் அஞ்சலி செலுத்துகிறது ஆஸ்ட்ரோ

ரிஷி கபூருக்கு திரைப்படங்கள் மூலம் அஞ்சலி செலுத்துகிறது ஆஸ்ட்ரோ

740
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி காலமான பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்திலும், அவரது கோடிக்கணக்கான இரசிகர்களுக்கு அவரது தனித்துவமான நடிப்பை நினைவுபடுத்தும் விதமாகவும், அவரது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய இரண்டு திரைப்படங்களை ஒளிபரப்பவிருக்கிறது ஆஸ்ட்ரோ.

“போபி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி “மே ஷாயர் தோ நஹி” என்று பாடிக் கொண்டே திரையில் தோன்றிய அவரது நடிப்பில் மயங்கிய இளைஞர்களும் யுவதிகளும் உலகம் எங்கும் கோடிக்கணக்கில் இருந்தார்கள்.

அடுத்தடுத்து பல படங்களில் நடித்து புகழ்பெற்றார் ரிஷிகபூர். கால ஓட்டத்தில் இந்திப்படவுலகின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்த நீட்டு சிங்கை மணந்தார் ரிஷி கபூர். இன்று அவரது மகன் ரன்பீர் கபூரும் சிறந்த இளம் நடிகர்களில் ஒருவராக இந்திப் படவுலகில் வலம் வருகிறார்.

#TamilSchoolmychoice

ரிஷி கபூர் தனது இறுதிக் காலத்தில் நடித்த படங்களில் அவரது அனுபவம் மிக்க, பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்திய இரண்டு படங்கள் “மல்க்” மற்றும் “102 நாட் அவுட்” ஆகும்.

அந்த இரண்டு படங்களையும் ரிஷிகபூருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆஸ்ட்ரோ ஒளிபரப்புகிறது.

நாளை புதன்கிழமை மே 6-ஆம் தேதி ஆஸ்ட்ரா வானவில் அலைவரிசையில் (அலைவரிசை 201) இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது மல்க் திரைப்படம். இந்தப் படத்தில் ரிஷி கபூருடன் பிரபல நடிகை தாப்சியும் இணைந்து நடித்துள்ளார். தமிழிலும் ஆடுகளம், கேம் ஓவர் படங்களில் நடித்தவர் தாப்சி.

எதிர்வரும் வியாழக்கிழமை மே 7-ஆம் தேதி ஆஸ்ட்ரா வானவில் அலைவரிசையில் (அலைவரிசை 201) இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது 102 நாட் அவுட் திரைப்படம்.

வயது முதிர்ந்த இரு முதியவர்களின் பிரச்சனைகளைச் சொல்லும் இந்தப் படத்தில் ரிஷி கபூருடன் இணைந்து நடித்திருப்பவர் பிரபல நடிகர் அமிதாப் பச்சன்.

ரிஷிகபூரின் சிறந்த நடிப்பைக் காட்டும் இந்த இரண்டு திரைப்படங்களையும் இரசிகர்கள் கண்டு மகிழலாம்.