Home One Line P1 நம்பிக்கைக் கூட்டணியில் பெர்சாத்துவை மீண்டும் ஏற்க தயார்!- அன்வார் இப்ராகிம்

நம்பிக்கைக் கூட்டணியில் பெர்சாத்துவை மீண்டும் ஏற்க தயார்!- அன்வார் இப்ராகிம்

549
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணியில் மீண்டும் பெர்சாத்து கட்சி இணைய வேண்டுமானால், அதனை அக்கூட்டணி ஏற்றுக் கொள்ளும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.

எவ்வாறாயினும், நம்பிக்கைக் கூட்டணி தலைமையின் கீழ் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட மாற்றத்தின் திட்டங்களை அது பின்பற்ற வேண்டும் என்று அன்வார் பெர்சாத்துவுக்கு நினைவுபடுத்தினார்.

“இது பெர்சாத்து எடுக்க வேண்டிய ஒரு முடிவு. இப்போது இரண்டு பெர்சாத்துகள் உள்ளன. ஒரு கட்சியாக முடிவெடுக்கப்பட வேண்டும்,”

#TamilSchoolmychoice

“ஆனால் நம்பிக்கைக் கூட்டணியில் முன்னோடியாக இருந்த சீர்திருத்தங்கள், ஊழல் முறையை நிராகரிக்கும் முறை உட்பட மாற்றத்தின் திட்டங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டும். கடந்த கால தவறுகளை மீண்டும் செய்ய நாங்கள் விரும்பவில்லை” என்று அவர் இன்று செவாய்க்கிழமை தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.