Home One Line P1 நாளை தொடங்கி 4 நாட்களுக்கு நெடுஞ்சாலைகளில் உள்ள ஓய்வு பகுதிகள் மூடப்படும்

நாளை தொடங்கி 4 நாட்களுக்கு நெடுஞ்சாலைகளில் உள்ள ஓய்வு பகுதிகள் மூடப்படும்

408
0
SHARE
Ad

கோலாலம்பூர்: உணவகங்கள் மற்றும் சூராவ் உள்ளிட்ட அனைத்து பிளாஸ் நெடுஞ்சாலைகளிலும் உள்ள ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு பகுதிகள் நாளை வியாழக்கிழமை தொடங்கி நான்கு நாட்களுக்கு பொது பயன்பாட்டிற்காக மூடப்பட்டுள்ளன.

ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு பகுதிகளில் உள்ள கழிப்பறைகள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

“எனவே, நீண்ட தூரத்தில் பயணிப்பவர்கள் உணவுக் கடைகள் மூடப்பட்டிருப்பதால் தங்கள் சொந்த உணவைக் கொண்டுவர அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் நிபந்தனை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் நிலையான இயக்க முறைக்கு இணங்குவதை உறுதிசெய்ய அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் இருப்பார்கள். “என்று அவர் இன்று ஊடக சந்திப்பில் கூறினார்.

#TamilSchoolmychoice

நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கு, ஓய்வு எடுக்க கார்களை நிறுத்த அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால், அவர்களது வாகனங்களில் மட்டுமே அவர்கள் இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும், நெடுஞ்சாலையில் உள்ள எண்ணெய் நிலையங்கள் காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை திறக்கப்படும் என்று அவர் கூறினார்.