Home உலகம் ஆஸ்திரேலிய ஓபன்: செரீனா அதிர்ச்சித் தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன்: செரீனா அதிர்ச்சித் தோல்வி

989
0
SHARE
Ad

spt3மெல்போர்ன்,ஜன.24-ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச்சுற்றில் அமெரிக்க வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், சக நாட்டு வீராங்கனை ஸ்லோயன் ஸ்டீஃபன்ஸிடம் அதிர்ச்சித் தோல்வியுற்றார்.

ஆடவர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ரோஜர் பெடரர் மற்றும் ஆன்டி முர்ரே ஆகியோர் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றன.

#TamilSchoolmychoice

மகளிர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளவரும் நடப்புச் சாம்பியனுமான விக்டோரியா அசரென்காவும், தரவரிசையில் இல்லாத ரஷியாவின் குஸ்னெட்சோவாவும் மோதினர். இந்த ஆட்டத்தின் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் குஸ்னெட்சோவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு எளிதாக முன்னேறினார் அசரென்கா. அரையிறுதி ஆட்டத்தில் இவர், அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டெஃபென்ஸýடன் மோதவுள்ளார்.போபண்ணா ஜோடி தோல்வி: கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, திபெத்தின் ஸý வெ ஹெய்க் ஜோடி 2-6, 3-6 என்ற நேர் செட்களில் செக் குடியரசின் குவெடா பெஸ்கீ, போலந்தின் மர்சின் மட்கோவ்ஸ்கி ஜோடியிடம் தோல்வியடைந்தது.

வியாழக்கிழமை நடைபெறும் கலப்பு இரட்டையர் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸா, அமெரிக்காவின் பாப் பிரையன் ஜோடி, செக் குடியரசின் ஹடெக்கா, செர்மக் ஜோடியுடன் மோதவுள்ளது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் மகேஷ் பூபதி, ரஷியாவின் நடியா பெட்ரோவா ஜோடி, ஆஸ்திரேலியாவின் கஜ்டோசோவா, மேத்யூ எப்டன் ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

செரீனா வெளியேற்றம்

மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், போட்டித் தரவரிசையில் 29-ம் இடத்தில் உள்ளவரும் சக நாட்டு வீராங்கனையுமான ஸ்லோயன் ஸ்டீஃபன்ஸிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

அவர், புதன்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தின் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். அடுத்த செட்டையும் கைப்பற்றி எளிதாக அரையிறுதிக்கு முன்னேறிவிடுவார் என்ற நிலையில் கடும் சவால் அளிக்கத் தொடங்கினார் ஸ்டீஃபன்ஸ். இதனால் இந்த செட்டை 5-7 என்ற கணக்கில் செரீனா இழந்தார்.

இதனால் 3-வது செட் மிகுந்த பரபரப்புக்குள்ளானது. இந்த செட்டை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வென்று அரையிறுதிக்கு ஸ்டீஃபன்ஸ் முன்னேறினார். இந்த ஆட்டத்தின்போது, முதுகுப் பகுதி தசைப் பிடிப்பால் மிகுந்த அவதிக்குள்ளானார் செரீனா. ஒரு கட்டத்தில் கோபமடைந்த அவர், தனது ராக்கெட்டை (டென்னிஸ் மட்டை) உடைத்தார்.