Home உலகம் ஜப்பானில் மிதமான நிலநடுக்கம்

ஜப்பானில் மிதமான நிலநடுக்கம்

711
0
SHARE
Ad

Japan-map Sliderடோக்கி‌யோ: ஜன.24-ஜப்பானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், ஜப்பானின் தென்கிழக்கே நெமூரா நகரில் கடலுக்கு அடி‌யில் 22 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் நகரில் கட்டடங்கள் லேசாக குலுங்கின.எனினும் சுனாமி எச்சிரிக்கை விடப்படவில்லை. உயிர்சேதம் குறித்த தகவல்களும் இல்லை. இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

இதே பகுதியில் தான் கடந்த ஆண்டு டிசம்பரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.1 ஆக பதிவானது குறிப்பிடதக்கது.