Home கலை உலகம் ராகாவின் ‘மக்களுக்கு மக்கள்’ எனும் புதிய முயற்சி

ராகாவின் ‘மக்களுக்கு மக்கள்’ எனும் புதிய முயற்சி

837
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலகட்டத்தில் கூடுதல் ஆதரவும் உதவியும்  தேவைப்படக்கூடியவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். அவர்களுக்கு உதவும் பொருட்டு நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை மிகவும் எளிமையான முறையில் நேரடியாக உதவிக் கோருபவர்கள் தொடர்புகொள்வதற்காக ‘மக்களுக்கு மக்கள்’ எனும் ஓர் அறியத் தளத்தை ராகா வானொலி அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆர்வமுள்ள அனைத்து மலேசியர்களும் ராகா அகப்பக்கம் வழியாக இதற்காகப் பதிவு செய்யலாம். மேலும், அவர்கள் உதவி கோருபவர்களால் நேரடியாக தொடர்புக் கொள்ளப்படுவர்.

ஆர்வமுள்ள நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் raaga.my எனும் அகப்பக்கத்தின் வழியாக பதிவு செய்யலாம்

#TamilSchoolmychoice

நன்கொடையாளர் அல்லது தன்னார்வலராக பதிவு செய்யும் முறை

  • ராகா அகப்பக்கம் வழியாக பதிவு செய்க.
  • உங்களைப் பற்றிய விவரங்களையும், நீங்கள் எவ்வாறு உதவலாம் என்பதற்கான சுருக்கமான விளக்கத்தையும் நிரப்புக.
  • சரிபார்ப்பிற்குப் பிறகு, உங்கள் விவரங்கள் ராகாவின் சமூக ஊடகங்களில் பகிரப்படும்: முகநூல் (Facebook), டுவிட்டர் (Twitter) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram)
  • உதவி கோருபவர்கள் பதிவுசெய்த நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

ராகாவைப் பின்தொடர

raaga.my

இலவச SYOK செயலியை உடனே பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!

www.facebook.com/RAAGA.my

www.instagram.com/raaga.my

வானொலி பண்பலைகளில் கேட்டு மகிழ :

இடம்                                 அதிர்வெண்கள்

கிள்ளான் பள்ளத்தாக்கு           99.3FM

அலோர்ஸ்டார்                         102.4FM

பினாங்கு                                  99.3FM

ஈப்போ                                      97.9FM

சிரம்பான்                                101.5FM

மலாக்கா                                 99.7FM

ஜோகூர் / ஜோகூர்பாரு          103.7FM

தைப்பிங்                                 102.1FM

லங்காவி                                  101.9FM

ஆஸ்ட்ரோ அலைவரிசை           859