Home One Line P1 “எல்லையில்லாத அன்பைக் கொண்ட தாய்மையைப் போற்றுவோம்” விக்னேஸ்வரனின் அன்னையர் தின வாழ்த்து

“எல்லையில்லாத அன்பைக் கொண்ட தாய்மையைப் போற்றுவோம்” விக்னேஸ்வரனின் அன்னையர் தின வாழ்த்து

969
0
SHARE
Ad

கோலாலம்பூர் – “நீரின்றி நிலம் அமையாது என்பதுபோல், தாயின்றி இவ்வுலகமும் அமையாது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அன்பு, கருணை, நேசம், தியாகம் ஆகிய உயரிய குணங்களுக்கு ஒரே உதாரணமாக விளங்குபவள் யார் என்றால் அதுவும் தாயாகத்தான் இருக்க முடியம். வயிற்றில் சுமந்து, பெற்று, சோர்வில்லாமல் வளர்த்து, துன்பங்களைத் தான் மட்டும் அனுபவித்து, இன்பங்களை பிள்ளைகளுக்கு வழங்கும் அன்னையரை அனைவரையும் நாம் என்னாளும் வணங்கி – போற்றிப் பாதுகாக்க வேண்டும்” என்று மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ செனட்டர் ச. விக்னேஸ்வரன் தமது அன்னையர் தின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

“அதுமட்டுமின்றி, அன்பு, அரவணைப்பு, அக்கறை, பாசம் நேசம், தியாகம் ஆகியவற்றை ஒரே மனத்தில் காணக் கூடிய இடம் தாய் மனமாகும். தான் வாழும் குடும்பத்திலும், அக்குடும்பத்திலுள்ள பிள்ளைகளின் வாழ்விலும் அக்கறை கொண்டு, தன்னலங் கருதாது காலை முதல் இரவு வரை உழைக்கிறாள் ஒரு தாய். அவரது கடமைக்கு அளவே இல்லை – அவளது அன்புக்கு எல்லையும் இல்லை” என்றும் தனது செய்தியில் தாய்மை குறித்து விக்னேஸ்வரன் புகழ்ந்துரைத்தார்.

“இத்துணை நற்குணங்களைக் கொண்ட தாயைச் சிறப்பித்துப் போற்ற வேண்டும் என்ற காரணத்தால்தான், அன்னையர் தினத்தை இந்த உலகம் கொண்டாடி வருகிறது. அந்த வகையில், தாயின் பெருமையைப் போற்றும் வகையிலும், பாராட்டும் வகையிலும் இன்றைய தினத்தில் ஒவ்வொரு அன்னையருக்கும்  அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என மஇகாவின் தேசியத் தலைவருமான விக்னேஸ்வரன் தனது அன்னையர் தின வாழ்த்துச் செய்தியில்  கூறியுள்ளார்.