கோலாலம்பூர்: கொவிட்19 சிவப்பு மண்டல பகுதிகளின் எண்ணிக்கை நேற்று வெள்ளிக்கிழையுடன் 11-ஆக உயர்ந்துள்ளது. ரெம்பாவில் சமீபத்திய சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து இது குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, அப்பகுதியில் கொவிட்19 சம்பவங்களின் எண்ணிக்கை ஏழு முதல் 59 வரை அதிகரித்துள்ளது. இதனால் அந்த பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று, சுகாதார அமைச்சு இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, ரெம்பாவ் பெடாஸில் வெளிநாட்டு தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட கொவிட்19 பாதிப்பு ஏற்பட்டதைக் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், நாட்டில் ஆரஞ்சு மண்டலத்தின் எண்ணிக்கை 77- ஆகவும், பச்சை மண்டலம் 113- ஆகவும் பதிவிடப்பட்டுள்ளது.