Home One Line P1 பெர்சாத்து கட்சியிலிருந்து மகாதீர், முக்ரிஸ் நீக்கப்படுகிறார்களா?

பெர்சாத்து கட்சியிலிருந்து மகாதீர், முக்ரிஸ் நீக்கப்படுகிறார்களா?

793
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பெர்சாத்து கட்சியில் நிலவி வரும் பூசல் நாளை திங்கட்கிழமை (மே11) உச்சகட்டப் போராக வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகாதீர், மொகிதின் யாசின் என இரு அணிகளாகப் பிளவுபட்டிருக்கும் பெர்சாத்து கட்சியின் மொகிதின் அணியின் உச்சமன்றக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. எனினும் இந்தக் கூட்டத்திற்கு மகாதீர், முக்ரிஸ் இருவரும் அழைக்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து மகாதீருக்கு எதிராக தனது அரசியல், பதவி அதிகார பலத்தைப் பயன்படுத்த மொகிதின் முடிவெடுத்து விட்டார் எனத் தெரிகிறது. நாளைய கூட்டத்தின் மூலம் பெரும்பான்மை பெர்சாத்து கட்சி உச்சமன்ற உறுப்பினர்கள் யார் பக்கம் நிற்கிறார்கள் என்பதும் தெரிந்து விடும்.

#TamilSchoolmychoice

நாளைய கூட்டத்தில் மகாதீர், முக்ரிஸ் இருவரும் கட்சியிலிருந்தே நீக்கப்படலாம். அவ்வாறு நடந்தால் மகாதீர், முக்ரிஸ் இருவரும் இணைந்து பெர்சாத்து கட்சியைத் தொடர்ந்து தலைமையேற்று நடத்துவார்களாக அல்லது புதிய கட்சியைத் தொடங்குவார்களா என்பதும் வெளிச்சத்துக்கு வரும்.

நாளைய பெர்சாத்து உச்சமன்றக் கூட்டத்தில் மகாதீர், முக்ரிஸ் இருவர் மட்டுமே அழைக்கப்படவில்லை. மாறாக, அவர்கள் ஆதரவாளர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றனர்.

எனவே, உச்சமன்றக் கூட்டத்தில் மகாதீர், முக்ரிஸ் இருவரையும் நீக்கும் முடிவு எடுக்கப்படுமா, அதற்கு உச்சமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு கிடைக்குமா என்பதும் நாளைய கூட்டத்தின் போது தெரிந்து விடும்.

இதற்கிடையில் கெடா மந்திரி பெசார் பதவியில் இருந்து முக்ரிஸ் மகாதீரை நீக்குவதற்கான முயற்சிகளும் தொடங்கப்பட்டிருக்கின்றன. பெர்சாத்து கட்சியில் மொகிதினுக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்களும், பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் இணைந்து புதிய மந்திரி பெசாரின் கீழ் புதிய மாநில அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.