Home One Line P2 மூன்றரை மாதங்களுக்குப் பின்னர் ஷங்காய் டிஸ்னிலேண்ட் திறக்கப்பட்டது

மூன்றரை மாதங்களுக்குப் பின்னர் ஷங்காய் டிஸ்னிலேண்ட் திறக்கப்பட்டது

655
0
SHARE
Ad

ஷங்காய் – சீனாவின் வணிகத் தலைநகரான ஷங்காயிலுள்ள டிஸ்னிலேண்ட் உல்லாசப் பூங்கா இன்று திங்கட்கிழமை (மே 11) முதல் பார்வையாளர்களுக்காகத் திறக்கப்பட்டது.

கொவிட்19 பாதிப்புகளால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவை டிஸ்னிலேண்ட் உல்லாச மையங்களாகும். உலகின் பல முக்கிய நகர்களில் அமைந்துள்ள இவை அனைத்தும் கொவிட்19 தொற்றால் மூடப்பட்டன.

இதன் காரணமாக அந்நிறுவனம் கோடிக்கணக்கான டாலர்கள் வருமான இழப்பை எதிர்நோக்கியது.

#TamilSchoolmychoice

எனினும் எதிர்பார்க்கப்பட்ட வரவேற்பு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கவில்லை.

வழக்கமாக ஒரு நாளுக்கு 80 ஆயிரம் பார்வையாளர்களை ஈர்க்கும் ஷங்காய் டிஸ்னிலேண்ட்டில் பணியாளர்கள் மட்டும் வழக்கமாக 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியில் ஈடுபடுவர்.

ஆனால், வழக்கமான பார்வையாளர்களில் 30 விழுக்காட்டினர் மட்டுமே வருவர் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அதைவிடக் குறைவான பார்வையாளர்களே வருகை தந்தனர். வருகையாளர்களை விட பணியாளர்கள் கூடுதலான எண்ணிக்கையில் இருந்தனர்.

டிஸ்னிலேண்டைத் தூய்மைப்படுத்தும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. உடனுக்குடன் இவர்கள் டிஸ்னிலேண்டிலுள்ள விளையாட்டு மையங்களை துடைத்துத் தூய்மைப்படுத்திக் கொண்டே இருப்பர் என டிஸ்னிலேண்ட் அறிவித்துள்ளது.

மேலும் வருகையாளர்கள் முகக் கவசம் அணிந்திருப்பர். நுழையும்போது அவர்களின் உடல் வெப்பம் பரிசோதிக்கப்படும். கூடல் இடைவெளியும் கடைப்பிடிக்கப்படும்.

உலக அளவில் ஷங்காய் மட்டுமே மீண்டும் திறக்கப்படும் முதல் டிஸ்னிலேண்ட் உல்லாசப் பூங்காவாகத் திகழ்கிறது. மற்ற பூங்காக்கள் கட்டம் கட்டமாகத் திறக்கப்படும்.

அமெரிக்காவின் ஓர்லாண்டோ டிஸ்னி பூங்கா எதிர்வரும் மே 20-ஆம் தேதி திறப்பு விழா காணும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.