Home One Line P2 8-வது ஆண்டாக உலகின் சிறந்த விமான நிலையமாக சாங்கி விமான நிலையம் பெயரிடப்பட்டுள்ளது

8-வது ஆண்டாக உலகின் சிறந்த விமான நிலையமாக சாங்கி விமான நிலையம் பெயரிடப்பட்டுள்ளது

823
0
SHARE
Ad

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாக உலகின் சிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக விமான நிலைய விருதுகள் 2020 வெற்றியாளர்களை ஸ்கைட்ராக்ஸ் திங்களன்று அறிவித்தது. இது முந்தைய ஆண்டுகளைப் போலவே, ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள விமான நிலையங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது.

கொவிட்-19 தொற்றுநோயால் விமானங்கள் பெரும்பாலும் தரையிறக்கப்பட்டு, விமான நிலையங்கள் பெரும்பாலும் காலியாக இருந்தாலும், ஸ்கைட்ராக்ஸ் அவர்களின் வருடாந்திர விருதுகளை வென்றவர்களை வெளியிட முடிவு செய்தது.

#TamilSchoolmychoice

இதன் அசல் விருது வழங்கும் விழா ஏப்ரல் 1- ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்தது.

ஆர்க்கிட் மற்றும் பட்டாம்பூச்சி தோட்டங்கள், கூரைக் குளம் போன்ற அம்சங்களுக்கு விமான நிலையங்களில் சாங்கி விமான நிலையம் தரமாக நீண்ட காலமாக கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு, இந்த விமான நிலையம் அதன் போட்டியாளர்களுடன் இடைவெளியை விரிவுபடுத்தியது. ஜுவல் சாங்கி விமான நிலையம், கண்ணாடி வளாகம், வாழும் மழைக்காடுகள், உட்புற நடை பாதைகள் மற்றும் உலகின் மிக உயரமான உட்புற நீர்வீழ்ச்சி, ஆகியவற்றை அமைத்து சிறப்பிடம் பெற்றது.

2020- இன் முதல் 10 விமான நிலையங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன:

1. சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம்
2. தோக்கியோ ஹனேடா விமான நிலையம்
3. ஹமாட் அனைத்துலக விமான நிலையம், டோஹா
4. இஞ்சியோன் அனைதுலக விமான நிலையம்
5. மியூனிக் விமான நிலையம்
6. ஹாங்காங் அனைத்துலக விமான நிலையம்
7. நரிதா அனைத்துலக விமான நிலையம்
8. மத்திய ஜப்பான் அனைத்துலக விமான நிலையம்
9. ஆம்ஸ்டர்டாம் ஷிபோல் விமான நிலையம்
10. கன்சாய் அனைத்துலக விமான நிலையம்