Home One Line P1 பெர்சாத்து இன்னும் நம்பிக்கைக் கூட்டணியில்தான் உள்ளது!- மகாதீர்

பெர்சாத்து இன்னும் நம்பிக்கைக் கூட்டணியில்தான் உள்ளது!- மகாதீர்

628
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெர்சாத்து தலைவர் டாக்டர் மகாதீர் முகமட் கட்சி இன்னும் நம்பிக்கைக் கூட்டணியின் ஒரு பகுதியாக இருப்பதாகவும், உச்சமன்றக் குழு வேறுவிதமாக முடிவு செய்யாத வரை கூட்டணியில் நீடிப்பதாகவும் இன்று கூறினார்.

“இன்னும் நம்பிக்கைக் கூட்டணியில் இருக்கிறோம். வெளியேறும் முடிவு உச்சமன்றக் குழு எடுக்கும். நாங்கள் வெளியேற விரும்பினால், (பின்னர்) நாங்கள் வெளியே செல்வோம்” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

பெர்சாத்துவின் தற்போதைய நிலை குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.

#TamilSchoolmychoice

கட்சியின் ஒப்புதல் இல்லாமல், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பலவீனமான கூட்டணியான தேசிய கூட்டணியில் மொகிதின் இணைந்ததாக மகாதீர் கூறினார்.

“முதலாவதாக, பெர்சாத்து நம்பிக்கைக் கூட்டணியை விட்டு ஒருபோதும் வெளியேற முடிவெடுக்கவில்லை. நாம் அனைவரும் அறிந்தபடி, மொகிதின் பேசியிருந்த ஒலிப்பதிவில் முடிவெடுக்க எனக்கு ஒரு வாரம் கொடுத்திருந்தார்.”

“ஆனால், வாரம் முடிவதற்குள், அவர் நம்பிக்கைக் கூட்டணியில் இல்லாததைப் போல நடந்து கொண்டார். இது கட்சி அமைப்பு விதிகளுக்கு எதிரானது.”

“உச்சமன்றக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் அவர் இந்த முடிவை எடுத்தார் என்பதையும் நாங்கள் கவனிக்கிறோம்.” என்று அவர் கூறினார்.

“எனவே நடந்தது என்னவென்றால், தேசிய கூட்டணி நிறுவப்படுவதற்கு முன்னர் மொகிதின் அவர்களுடன் சேர்ந்தார். அந்த முடிவு பெர்சாத்துவிடமிருந்து எந்த பதிலும் பெறாமல் எடுக்கப்பட்டது. ” என்று அவர் மேலும் கூறினார்.