கோலாலம்பூர்: பேரங்காடிகள் மற்றும் மளிகைக் கடைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள கூடல் இடைவெளி தொடர்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிர்வாக நடைமுறையை மீறி இன்னும் சில வணிகங்களும், கடைக்காரர்களும் செயல்பட்டு வருவது கவலைக்குரியது என்று சுகாதார அமைச்சு இயக்குனர்டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.
“சிலர் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிர்வாக நடைமுறையுடன் இணங்கவில்லை என்பதைக் காட்டும் காணொளிகள் பரவலாகிவிட்டன.”
“இது உண்மையில் கவலை அளிக்கிறது. அனைத்து வணிகங்களும் செயல்பட அனுமதிக்கப்படுவதற்கான வழிகாட்டியாக தேசிய பாதுகாப்பு மன்றம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிர்வாக நடைமுறையை உருவாக்கியுள்ளது, ” என்று அவர் நேற்று தனது தினசரி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
நுழைவு மற்றும் வெளியேறும் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதில் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிர்வாக நடைமுறையை அடங்கும். வளாகத்திற்குள் வாடிக்கையாளர்களைக் கட்டுப்படுத்துதல், நுழைவாயில்களில் கிருமி தடுப்புப் பொருளை வழங்குதல், உடல் வெப்பநிலை சோதனைகளைச் செய்தல் மற்றும் முகக்கவசங்கள் அணிவது போன்றவை இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.
அனைத்து முதலாளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிர்வாக நடைமுறையை செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்வது மிக முக்கியம் என்றும், அவர்களின் தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதனை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கூடல் இடைவெளி நெரிசலான பகுதிகளில் நடைமுறைப்படுத்த கடினமாக இருக்கும் மற்றும் குறுகிய இடங்களில் பொருட்களை வாங்குவதை தவிர்க்கவும் சுகாதார அமைச்சகம் மக்களை வலியுறுத்தியது.
“பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பேரங்காடிகளுக்கு அல்லது நெரிசலான பொது இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.” என்று அவர் கூறினார்.