கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், மாமன்னர் சுல்தான் அப்துல்லா “தமது அரசு” என்ற வெளிப்பாட்டை தற்போதுள்ள அரசாங்கத்தை அங்கீகரிப்பதற்கான ஒரு வாதமாகப் பயன்படுத்திய சிலரை விமர்சித்துள்ளார்.
நாட்டின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானின் நிர்வாகத்திலிருந்து, இந்த சொல் பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
“துங்கு அப்துல் ரஹ்மான் அரசாங்கத்தின் போது, அவர் தமது அரசாங்கம் என்றும், பின்னர் துன் ரசாக் காலத்தில், நம்பிக்கைக் கூட்டணிக் காலத்திலும் ‘தமது அரசு’ என்று குறிப்பிட்டிருப்பார்கள்.”
“பெர்சாத்து இளைஞர் ஒருவருக்கு , அவர் அங்கு இருக்கிறார் (மொகிதினின் ஆதரவாளர்), அவருக்கு புரியவில்லை. ” என்று அன்வார் குறிப்பிட்டுள்ளார்.