Home One Line P1 பிரதமர், கொவிட்-19 சந்தேகத்தினால் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்

பிரதமர், கொவிட்-19 சந்தேகத்தினால் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்

666
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – பிரதமர் மொகிதின் யாசின் அடுத்த 14 நாட்களுக்கு தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கடந்த புதன்கிழமை (மே 20) அமைச்சரவைக்குப் பிந்திய சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரி ஒருவருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இன்று வெள்ளிக்கிழமை காலை கொவிட்19 பரிசோதனைக்குத் தன்னை உட்படுத்திக் கொண்ட மொகிதினுக்கு அந்தத் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இருப்பினும் வழக்கமான நடைமுறைகளின்படி அவர் இன்று வெள்ளிக்கிழமை மாலை முதல் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

#TamilSchoolmychoice

இந்தத் தகவலை பிரதமர் துறை அமைச்சு வெளியிட்டது.

அமைச்சரவைக்குப் பிந்திய கூட்டத்தில் கலந்து கொண்ட மற்றவர்களும் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பிரதமர் அலுவலகத்தில் நடைபெறும் எல்லா சந்திப்புக் கூட்டங்களிலும் கூடல் இடைவெளி உள்ளிட்ட அனைத்து வகையான சுகாதாரக் கட்டுப்பாடுகளும் முறையாகவும் தீவிரமாகவும் கடைப்பிடிக்கப்படுகின்றன என்றும் பிரதமர் துறையின் அறிக்கை மேலும் தெரிவித்தது.