Home One Line P1 அஸ்மின் அலியின் மூத்த சகோதரிக்கு கொவிட்19 தொற்று

அஸ்மின் அலியின் மூத்த சகோதரிக்கு கொவிட்19 தொற்று

864
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அனைத்துலக வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியின் மூத்த சகோதரி கொவிட்19-க்கு சாதகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதை அவரது தங்கை உமி ஹபில்டா அலி வெள்ளிக்கிழமை (மே 22) முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

அவரது சகோதரி நோர்லியா அலி (62) சுங்கை புலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“சோகமான செய்தி, என் மூத்த சகோதரி கொவிட்19- க்கு நேர்மறையாக பரிசோதிக்கப்பட்டார். இப்போது சுங்கை புலோ மருத்துவமனையில் இருக்கிறார்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.