கோலாலம்பூர் – சமீபத்தில் உலகளவில் விளையாட்டு நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள வேளையில், ஆஸ்ட்ரோ தன் முழு விளையாட்டு அலைவரிசைகளுக்கான (பேக்) வாடிக்கையாளர்களுக்கு அடுத்த இரண்டு மாதக் கட்டணத்தில் மாதத்திற்கு RM20 சிறப்புத் தள்ளுபடியை வழங்குகிறது.
கூடுதல் அலைவரிசைகள் மற்றும் உள்ளடக்கங்களை இலவசமாக கண்டு களிக்கும் வாய்ப்பை வழங்கியதோடு, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்க ஆஸ்ட்ரோ மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளில் ஒன்றாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிபந்தனையுடனான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (CMCO) போதும், விளையாட்டு அலைவரிசைகளுக்கான வாடிக்கையாளர்கள் அனைத்து அலைவரிசைகளையும் தொடர்ந்து இலவசமாக கண்டு மகிழும் வேளையில் (குடியிருப்பு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே, திரைப்படங்கள் மற்றும் நிகழ்வுகளைக் கட்டணம் செலுத்திப் பார்ப்பதைத் (Pay Per View) தவிர்த்து), மற்ற வாடிக்கையாளர்கள் செய்தி, கற்றல், ஆசிய திரைப்படங்கள் மற்றும் ஸ்டே ஹோம் (Stay Home) கச்சேரி போன்ற அலைவரிசைகளை இலவசமாக கண்டு களிக்கின்றனர்.
ஆஸ்ட்ரோவின் விளையாட்டுப் பிரிவு தலைவர் லீ சூங் காய் கூறுகையில், “கொவிட்-19 தொற்றுநோய், நேரலை விளையாட்டுகள் உட்பட உலகளவில் பல நிகழ்வுகளை பாதித்துள்ளது. கடந்த 2 மாதங்களில் நேரலை விளையாட்டுகள் எதுவும் இல்லாத நேரத்தில் இம்மாதிரியானத் தள்ளுபடியை வழங்குவது சரியான செயல் என்று நாங்கள் நம்புகிறோம். மே 31-ஆம் தேதி வரை ஆக்கப்பூர்வமான விளையாட்டு அலைவரிசைத் தொகுப்பு வாடிக்கையாளர்களுக்கு ஜூன் மற்றும் ஜூலை, என அடுத்த 2 மாத கட்டணப் பட்டியலில் அந்த தள்ளுபடி பிரதிபலிக்கப்படும்” என்றார்.
லீ தொடர்ந்து கூறுகையில், “நேரலை விளையாட்டுகள் மீண்டும் வருவதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சிறந்த தருணங்கள் மற்றும் பிற விளையாட்டு உள்ளடக்கங்களைத் தவிர, Bundesliga, K-League மற்றும் UFC போன்ற விளையாட்டுகளின் நேரலை ஒளிபரப்பை ஆஸ்ட்ரோ கடந்த வார இறுதியில் வழங்கியது. நேரலை விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் லீக்குகள் மீண்டும் தொடங்கும் போது அவற்றை ஆஸ்ட்ரோ தொடர்ந்து நேரலையாக ஒளிபரப்பு செய்யும்.. நேரலை விளையாட்டுகளைத் திரும்பவும் கொண்டு வருவதைக் குறித்து நாங்கள் உரிமைதாரர்களுடன் விரைவாக கலந்தாலோசித்து வருகிறோம்” என்றும் தெரிவித்தார்.
மேல் விபரங்களுக்கு, www.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வரவும். நேரலை விளையாட்டு அட்டவணைகள் குறித்த மேல் விபரங்களுக்கு, ஆஸ்ட்ரோ மற்றும் ஸ்டேடியம் ஆஸ்ட்ரோவின் சமூக வலைத்தளங்களைப் பின்தொடரவும்.