Home One Line P1 மொகிதின் யாசின் உரிய செயல்முறையுடன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்- மகாதீர்

மொகிதின் யாசின் உரிய செயல்முறையுடன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்- மகாதீர்

415
0
SHARE
Ad

கோலாலம்பூர்: துன் டாக்டர் மகாதீர் முகமட் பெர்சாத்து கட்சி, மொகிதின் யாசினை உரிய செயல்முறை மூலம் பதவி நீக்கம் செய்யும் என்று தெரிவித்தார்.

இன்று பிற்பகல் பெர்சாத்துவின் தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மகாதீர், மொகிதினை பதவி நீக்கம் செய்வதற்கான முடிவு உச்சமன்றக் குழு கூட்டத்தின் மூலம் மட்டுமே எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

“ஆம், நாங்கள் அவரை நீக்க வேண்டும், ஆனால் நாங்கள் ஒரு உச்சமன்றக் கூட்டத்தை நடத்த வேண்டும்.” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

உச்சமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்து மொகிதின் கட்சிக்கு துரோகம் இழைத்ததாக நினைத்தாரா என்று செய்தியாளர்களுக்கு பதிலளித்தபோது மகாதீர் இதனைத் தெரிவித்தார்.