Home One Line P1 மலாக்கா புதிய ஆளுநராக முகமட் அலி ருஸ்தாம் பதவி ஏற்கிறார்

மலாக்கா புதிய ஆளுநராக முகமட் அலி ருஸ்தாம் பதவி ஏற்கிறார்

656
0
SHARE
Ad

மலாக்கா: முகமட் காலீல் யாகோபுக்கு பதிலாக மலாக்கா மாநிலத்தின் ஏழாவது ஆளுநராக மலாக்கா முன்னாள் முதல்வர் முகமட் அலி ருஸ்தாம் நியமிக்கப்பட உள்ளார்.

முகமட் காலீல் முன்னாள் அம்னோ பொதுச் செயலாளரும் பகாங் முதலமைச்சருமாவார்.

முன்னாள் பாயா ரும்புட் சட்டமன்ற உறுப்பினரும் பத்து பெரெண்டாம் நாடாளுமன்ற உறுப்பினருமான முகமட் அலிக்கு வாழ்த்து கூறும் காணொளி மூலமாக, மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் இட்ரிஸ் ஹரோன் உறுதிப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை மலாக்காவில் உள்ள ஆயேர் கெரோ மாநில வளாகத்தில் நடைபெற இருப்பதாக் கூறப்படுகிறது.

முகமட் அலி 1999 முதல் 2013 வரை மலாக்காவின் முதலமைச்சராக பணியாற்றினார்.

இதற்கிடையில், 16 ஆண்டுகளாக இந்த பதவியை வகித்த முகமட் காலீலுக்கும் இட்ரிஸ் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.