கோலாலம்பூர்: பொதுப் பணித் துறை துணை அமைச்சர் ஷாருடின் சல்லே பதவி விலகியதாக அறிவித்துள்ளார். இதனால், தேசிய கூட்டணி தற்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பெரும்பான்மையுடன் உள்ளது.
ஸ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினர் தேசிய கூட்டணியில் சேருவதன் மூலம் ஓர் அரசியல் தவற்றை செய்ததாகக் கூறிய ஓர் ஊடக அறிக்கையைத் தொடர்ந்து அவரது பதவி விலகல் குறித்த ஊகங்கள் கிளம்பின.
“ஸ்ரீ காடிங் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்காளர்கள் இடைத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர் என்பதைக் கருத்தில் கொண்டு நான் முன்னுரிமை அளித்திருக்க வேண்டும்.
“இந்த பிழையை சரிசெய்வதற்கான முதல் படியாக, தேசிய கூட்டணியின் பிரதமரால் இந்த பதவிக்கு நான் நியமிக்கப்பட்டதால், நான் பதவி விலகுகிறேன்.” என்று அவர் ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், ஷாருடின் தனது பதவி விலகலை பெரிதா ஹாரியானுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் சுருக்கமான உறுதிப்படுத்தி உள்ளார்.
“ஆம், நான் பதவி விலகினேன்.” என்று அவர் வாட்சாப் வழியாக சுருக்கமாக கூறினார்.