கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதியில் 42 மில்லியனை முறைகேடாகப் பயன்படுத்திய ஏழு குற்றச்சாட்டுகளில், நஜிப் ரசாக் குற்றவாளியா அல்லது விடுவிக்கப்படுவாறா என்ற தீர்ப்பு ஜூலை 28- ஆம் தேதி வழங்கப்படும்.
நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி, ஜுலை 28 தனது முடிவை காலை 10 மணிக்கு வழங்குவதாக இன்று தீர்ப்பளித்தார்.
94 நாட்கள் விசாரணை நீடித்தது, இறுதி சமர்ப்பிப்பு மூன்று நாட்கள் நீடித்தது மற்றும் இன்று மதியம் 1 மணியளவில் முடிந்தது.
எஸ்ஆர்சி இன்டர்நேஷனல், 2012- இல் நிதி அமைச்சகத்தில் இணைக்கப்படுவதற்கு முன்பு 1எம்டிபியின் துணை நிறுவனமாக இருந்தது.