Home One Line P2 திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு கொரொனா தொற்று

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு கொரொனா தொற்று

785
0
SHARE
Ad

சென்னை – திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களில் பிரபலமானவர் ஜெ.அன்பழகன். சென்னை திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர். கம்பீரமான, பெருத்த உடலமைப்பு கொண்ட அன்பழகன் தமிழக சட்டமன்ற மோதல்களில் “அதிரடியாக” களமிறங்குபவர்.

ஜெ.அன்பழகன் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளருமாவார்.

அடிக்கடி துணிச்சலான கருத்துகளை அதிமுகவுக்கு எதிராக உதிர்ப்பவர் ஜெ.அன்பழகன்.

#TamilSchoolmychoice

அவருக்கும் கொரொனா தொற்று பீடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கல்லீரல் பிரச்சனையால் வெளிநாட்டுக்கு சென்று அறுவைச் சிகிச்சை சிகிச்சை செய்து கொண்டவர் அன்பழகன்.

அவரது உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுவாசக் கருவியின் உதவியோடு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன. அவருக்கு சிறுநீரகப் பாதிப்பும் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

அன்பழகன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தீவிர ஆதரவாளருமாவார். கட்சியில் ஸ்டாலினின் முக்கியத் தளபதிகளில் ஒருவராகக் கருதப்படுபவர்.

அன்பழகனுக்கு கொவிட்-19 தொற்று பீடிக்கப்பட்டதைத் தொடர்ந்து திமுக கட்சி வட்டாரத்தில் அன்பழகனுடன் தொடர்பில் இருந்தவர்களும் தற்போது அச்சத்தில் இருக்கிறார்கள்.

அன்பழகனுக்கு ஏற்பட்ட கொவிட்-19 தொற்றால் அவரது குடும்பத்தினரும், நெருங்கிப் பழகியவர்களும் தனிமைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.