Home கலை உலகம் ‘நக்கீரன்’ : ஆஸ்ட்ரோவில் புதிய உள்ளூர் தமிழ் ஆவணப்படத் தொடர்

‘நக்கீரன்’ : ஆஸ்ட்ரோவில் புதிய உள்ளூர் தமிழ் ஆவணப்படத் தொடர்

905
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் நக்கீரன் எனும் சிந்தனையைத் தூண்டும் புத்தம் புதிய உள்ளூர் தமிழ் ஆவணப்படத் தொடரை இன்று சனிக்கிழமை ஜூன் 6 முதல், இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் துல்லிய ஒளிபரப்பிலும் (எச்டி) (அலைவரிசை 231), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்டில் கண்டு களிக்கலாம்.

கார்த்திக் ஷாமலன் கைவண்ணத்தில் மலர்ந்த, நக்கீரன் 30 அத்தியாயங்களைக் கொண்டிருக்கும். உள்ளூர் சமூகங்களை உள்ளடக்கிய தற்போதையக் கடினமான சிக்கல்களைக் களையும் வண்ணம் ஆழமான அணுகுமுறைகளை அவை விவரிக்கும்.

தமிழ் பள்ளிகளின் போராட்டங்கள், குண்டர் கும்பல், பகடிவதை, மதம் சார்ந்த பிரச்சனைகள், உள்ளூர் கலாச்சாரங்களின் மாற்றம், வயதான மற்றும் வெளிநாட்டு மக்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள், உடல் மற்றும் மனநலப் பிரச்சினைகள், விலங்குகள் துஷ்பிரயோகம், குற்றவியல், போலி செய்திகள் என மனதிற்கு நெருக்கமான அன்றாட சிக்கல்களைச் சித்தரிப்பதன் வழி இந்த ஆவணப்படத் தொடர் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் அமைந்திருக்கும். இச்சிக்கல்களை அடையாளம் கண்டு தீர்ப்பதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு 30 நிமிட அத்தியாயமும் இச்சிக்கல்களை எவ்வாறு தடுப்பது, குறைப்பது என்பது பற்றிய நுண்ணறிவுகளை வழங்கும்.

#TamilSchoolmychoice

அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு நக்கீரன் ஆவணப்படத் தொடரின் புத்தம் புதிய அத்தியாயங்களை டிவி மற்றும் ஆஸ்ட்ரோ கோவில் கண்டு மகிழலாம்.

அல்லது எப்போது வேண்டுமானாலும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் செய்து மகிழலாம்.

“நக்கீரன்” – விவரங்கள் சுருக்கம்

அத்தியாயம் 1 & 2:
தமிழ்ப்பள்ளி வேண்டாமா?

6 & 7 ஜூன் 2020, இரவு 9 மணி தங்கள் குழந்தைகளைத் தமிழ் பள்ளிகளுக்கு அனுப்புவதில் உள்ளூர் சமூகத்தினருக்கு ஆர்வமின்மை இருப்பதாகத் தெரிகிறது. இவ்வத்தியாயங்கள் தமிழ் பள்ளிகள் மற்றும் தமிழ் மொழி எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு மலரும்.

அத்தியாயம் 3 & 4:
சாமியும் ஆசாமியும்

13 & 14 ஜூன் 2020, இரவு 9 மணி சில நபர்கள் தெய்வ அருள் தன் மீது இறங்கி விட்டதாக அதாவது மருள் வந்து விட்டதாக கூறி பாசாங்கு செய்து பணத்தையும் விளம்பரத்தையும் பெற மற்றவர்களைக் கையாளுகிறார்கள். இவ்வத்தியாயங்கள் மருள் நிலைக்கு வருவதற்கான செயல்முறையையும் அதன் பின்னணியில் உள்ள உண்மையையும் வெளிப்படுத்தும்.

அத்தியாயம் 5 & 6:
சாகப் போறேன்

20 & 21 ஜூன் 2020, இரவு 9 மணி
மலேசியர்களிடையே ஏற்படும் மனச்சோர்வு (depression) பற்றிய ஆழமான கலந்துரையாடல்.

அத்தியாயம் 7 & 8:
சுட்டி குண்டர் கூட்டம்

27 & 28 ஜூன் 2020, இரவு 9 மணி குழந்தைகளும் மாணவர்களும் எவ்வாறு குண்டர் கும்பல் தாக்கத்திற்கு ஆளாகின்றனர், பகடிவதை மற்றும் பிற சமூகப் பிரச்சினைகளால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பது பற்றிய விவாதம். இவ்வத்தியாயங்கள் பெற்றோர்கள், பொழுதுபோக்கு, சமூகம் போன்றவை இம்முக்கிய பிரச்சினைகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எவ்வாறு பங்களித்தனர் என்பதை மையமாகக் கொண்டிருக்கும்.

அத்தியாயம் 9 & 10:
சோரு தம்பா

4 & 5 ஜூலை 2020, இரவு 9 மணி
உடல் பருமனைப் பற்றின ஆழமான கருத்துக்களை உள்ளடக்கிய அத்தியாயங்கள். பல மலேசியர்கள் அனுபவிக்கும் ஒரு கடுமையான உடல்நலப் பிரச்சினையாக இருந்தாலும் கூட, இப்பிரச்சனை பெரும்பாலும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அத்தியாயம் 11 & 12:
திருடர்கள் ஜாக்கிரதை

11 & 12 ஜூலை 2020, இரவு 9 மணி வழிப்பறிக் கொள்ளை, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டுகள் என திருட்டு அல்லது கொள்ளை போன்ற குற்றவியல் பற்றிய விவாதம். இவ்வத்தியாயங்கள் கொள்ளை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் நடக்கும் விரிவான திட்டமிடல் குறித்தும் கவனம் செலுத்தும்.

அத்தியாயம் 13 & 14:
எங்கே நிம்மதி

18 & 19 ஜூலை 2020, இரவு 9 மணி வயதானவர்கள், ஆதரவற்றோர்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகளை மையமாகக் கொண்டிருக்கும்.

அத்தியாயம் 15 & 16:
அது கடக்குது

25 & 26 ஜூலை 2020, இரவு 9 மணி
இவ்வத்தியாயங்கள் விலங்கு துஷ்பிரயோகம் தொடர்பானச் சிக்கல்களைச் சித்தரிக்கும்.

அத்தியாயம் 17 & 18:
அபா லகி இந்தியா மவு ? (Apa Lagi India Mau?)

1 & 2 ஆகஸ்டு 2020, இரவு 9 மணி
இணையத்தில் (ஆன்லைன்) வைரலாகும் தகவல்கள், போலிச் செய்திகள், வதந்திகள் போன்றவற்றிற்கு உள்ளூர் சமூகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன. இந்த அத்தியாயங்கள் உள்ளூர் சமூகங்களுக்கான நன்மைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் பற்றாக்குறைகளைப் பற்றிய தகவல்களை விவரிக்கும்.

அத்தியாயம் 19 & 20:
கலை ஒரு போர்

8 & 9 ஆகஸ்டு 2020, இரவு 9 மணி மலேசிய இந்திய கலை, சினிமா மற்றும் இசைத் துறையின் தற்போதைய நிலை, அத்துடன் வேகமாக விரிவடைந்து வரும் இத்துறையைச் சுற்றியுள்ளச் சிக்கல்கள்.

அத்தியாயம் 21 & 22:
(மோடன் பாங்!) Modern Baang!

15 & 16 ஆகஸ்டு 2020, இரவு 9 மணி
மேற்கத்திய அல்லது பிற வெளிநாட்டு கலாச்சாரங்களின் ஆதிக்கத்தினால் நம் கலாச்சாரம் மற்றும் அதன் வேர்கள் பாதிப்படைந்துள்ளதோடு காணாமலும் போயுள்ளன.

அத்தியாயம் 23 & 24:
பேய் புடிச்சிருக்கு!

22 & 23 ஆகஸ்டு 2020, இரவு 9 மணி
மன நோய் கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு தீவிரமான நிலை என்று இன்னும் ஒப்புக் கொள்ளப்படாததால் இன்றுவரை பெரும்பாலும் மூடநம்பிக்கையுடன் தொடர்புப்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக மனநல நிபுணர்களிடமிருந்து உதவி பெறப்படுவதில்லை.

அத்தியாயம் 25 & 26:
காசே தான் கடவுளப்பா

29 & 30 ஆகஸ்டு 2020, இரவு 9 மணி இவ்வத்தியாயங்கள் நிதி விஷயங்கள், வணிக வாய்ப்புகள் மற்றும் வணிகத்தில் ஈடுபடுபவர்கள் எதிர்கொள்ளும் தடைகள் போன்றவற்றைச் சித்தரிக்கும்.

அத்தியாயம் 27 & 28:
ஹுஸ் தி ஹீரோ (Who’s The Hero?)

5 & 6 செப்டம்பர் 2020, இரவு 9 மணி மலேசிய இந்திய இளைஞர்களிடையே ஒரு பிரச்சினையாக மாறியுள்ள தமிழ் திரைப்பட உச்ச கதாநாயகர்களை கொண்டாடும் போக்கை (hero-worshipping) மையமாகக் கொண்டது. இந்த ‘எதிர் கலாச்சாரத்தின்’ (counter culture) பாதகமான விளைவுகளையும் விவாதிக்கும்.

அத்தியாயம் 29 & 30:
ஜாதிகள் தேவையா பாப்பா?

12 & 13 செப்டம்பர் 2020, இரவு 9 மணி ‘ஜாதி’ என்ற தலைப்பு வரும்போது மலேசியர்களின் மனநிலை, கருத்து, நிலைப்பாடு போன்றவற்றை இந்த அத்தியாயங்கள் சித்தரிக்கும்.