Home One Line P2 ஜூன் 6 : தமிழ் மொழி இந்தியாவின் முதல் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்ட நாள்!

ஜூன் 6 : தமிழ் மொழி இந்தியாவின் முதல் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்ட நாள்!

1357
0
SHARE
Ad

புதுடில்லி – இன்று ஜூன் ஆறாம் நாள் தமிழ் மொழி இந்தியாவில் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள் ஆகும். கடந்த 2014ஆம் ஆண்டு தமிழ், இந்திய மொழிகளில் முதல் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது

மிகப்பெரிய தொன்மை வாய்ந்த தமிழ் மொழி ஒரு நீண்டகால போராட்டத்திற்குப் பின்னரே செம்மொழியாக இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது.

மொழியாக அங்கீகரிக்கப்பட்ட உதாரணமாக கிடைக்கக்கூடிய ஆவணங்களின்படி கலிபோர்னியா அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக இருந்த ஜார்ஜ் ஹார்ட் என்பவர் வெளியிட்டு இருக்கும் ஒரு அறிக்கையின்படி தமிழ்மொழியின் பெருமையை பற்றி அவள் கூறியிருக்கிறார் அந்த ஆவணத்தில் அவர் கூறுவதில் நாம் ஏன் அவரது கூற்றை எடுத்துக் கொள்ளவேண்டும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றால் அவர் அவரே குறிப்பிடுகிறார் படி பல ஆண்டுகளாக சமஸ்கிருத மொழியை ஆழ்ந்து படித்தவர்

பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் தமிழ் மொழிக்கு வழங்கும் புகழாரம்

#TamilSchoolmychoice

பேராசிரியர் ஜார்ஜ் எல்.ஹார்ட் (படம்) என்பவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர். அந்தப் பல்கலைக் கழகத்தின் தெற்கு மற்றும் தெற்கு ஆசிய ஆய்வகத்தின் கீழ் இயங்கும் தமிழ் மொழிப் பிரிவின் பேராசிரியராக செயல்பட்டவர்.

75 வயதான அவர் தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என வாதாடியவர்.

2000-ஆம் ஆண்டில் அவர் வெளியிட்ட ஓர் அறிக்கை இன்றும் பலராலும் நினைவு கூரப்படுகிறது.

அவரது கூற்றுப்படி 2200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் படைக்கப்பட்ட இலக்கண நூல் தொல்காப்பியம் நமது தமிழின் பழம் பெருமைக்குச் சான்று என்கிறார்.

சங்க இலக்கியங்கள், பத்துப்பாட்டு போன்றவை இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானவை என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிடுகின்றார் காளிதாசனின் சமஸ்கிருத காவியமான சாகுந்தலையை விட குறைந்தது 200 ஆண்டுகள் முந்தியவை தமிழின் சங்க கால இலக்கியங்களும் கவிதைகளும் என்கிறார் ஜோர்ஜ் ஹார்ட்.

மற்ற இந்திய மொழிகளில் தமிழ் மொழி மட்டுமே சமஸ்கிருதத்தின் தாக்கம் இல்லாமல் இயங்கும் ஒரே மொழி என்றும் அவர் கூறியிருக்கின்றார். மற்ற மொழிகளெல்லாம் சமஸ்கிருதத்தின் தாக்கத்தில் இன்றும் பயன்படுத்தப்படுகின்றது. தமிழ் மட்டுமே தனித்து இயங்கவல்லது. சமஸ்கிருதத்தின் தாக்கம், சாயல்கள் இல்லாமல் உருவாக்கப்பட்ட இலக்கியங்களைக் கொண்டது தமிழ் மொழி என்பது அவரது வாதம்.

ஜோர்ஜ் ஹார்ட் எழுதிய நூல்களில் ஒன்று

தமிழுக்கே உரிய தனித்து இயங்கக் கூடிய இலக்கணங்கள், செய்யுள்களை வடிவமைக்கும் யாப்பிலக்கண முறை தமிழுக்கே உரித்தானவை. மிகப்பெரிய கடலெனப் பரந்து கிடக்கும் இலக்கியங்கள் கொண்டது தமிழ் என்றும் ஜோர்ஜ் ஹார்ட்டின் ஆவணம் விவரிக்கின்றது.

அவர் கூறுவதை மிகச் சாதாரணமாக, வழக்கமான தமிழ் பற்றாளர் ஒருவரின் கூற்றாக எடுத்துக் கொள்ள முடியாது.

காரணம், இந்தியாவில் சமஸ்கிருத மொழிகளில் எழுதப்பட்ட இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தவர் அவர். 1963 ஆம் ஆண்டு முதல் சமஸ்கிருதத்தின் பல இலக்கிய வடிவங்களை அதன் அசல் மொழி வடிவத்தில் தான் படித்து ஆய்வு செய்ததாகவும் அவரே கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட அவர்தான் சமஸ்கிருதத்தை விட – உலகின் பல மொழிகளை விட – தமிழ் மொழியே மூத்த மொழி என்று சான்றிதழ் கொடுக்கிறார்.

உலகின் மூத்த இலக்கியங்களைத் தந்த மொழிகளாக கருதப்படும் பழம்பெரும் மொழிகளான சமஸ்கிருதம், கிரேக்கம், சீனம், அரபு ஆகிய மொழிகளுக்கு ஈடாக அல்லது அதைவிட மேலான இலக்கியங்களைக் கொண்டது தமிழ் மொழி என்றும் கூறியிருக்கிறார் ஜோர்ஜ் ஹார்ட்.

எந்த ஓர் இந்தியக் கலாச்சாரம், பண்பாட்டிலும் இணையாமல் தனித்து இயங்குகின்ற பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் கொண்டது தமிழ் என்றும் அவர் மேலும் கூறியிருக்கின்றார்.

ஒரு மொழி செம்மொழியாகக் கருதப்படுவதற்கு அதற்கு பல அம்சங்கள் இருக்க வேண்டும். முதலாவதாக அது பழமை வாய்ந்ததாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, சுதந்திரமான மற்ற எந்த மொழியையும் சாராத பண்பாட்டு கலாச்சாரப் பின்னணியை கொண்டிருக்க வேண்டும்.

மற்ற எந்த ஒரு பாரம்பரியத்திலிருந்தும் கிளையாகப் பிரியும் மொழியாக அது இருக்கக் கூடாது.

இவை அனைத்தையும் கொண்டிருந்த காரணத்தினால் தான் இந்தியாவின் முதல் செம்மொழியாக தமிழ் மொழி அறிவிக்கப்பட்டது. அதுவும் நீண்ட காலமாக தமிழ்நாட்டிலும், உலக அளவிலும் தமிழர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாகவே தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது

அதன்பின் தமிழை விட வெகு காலத்திற்குப் பின்னர் முளைத்தெழுந்த வேறு சில மொழிகளும் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நிலைமை இந்தியாவில் ஏற்பட்டது. இது இந்திய அரசியலுக்கு உரிய ஒரு சாபக்கேடு என்பதை விளக்க வேண்டியதில்லை.

எனினும் தமிழ், சமஸ்கிருதம், ஹீப்ரு, கிரேக்கம், லத்தீன், சீனம் ஆகிய ஆறு மொழிகளே உலக அளவில் செம்மொழிகளாகக் கொண்டாடப்படுகின்றன.

செம்மொழியான தமிழ் மொழியைப் போற்றுவோம்; கொண்டாடுவோம்; அதன் பெருமைகளை என்றும் காப்போம்!

-இரா.முத்தரசன்