Home One Line P1 விமானங்கள், விரைவு பேருந்துகளில் எல்லா இருக்கைகளும் பயன்படுத்தலாம்

விமானங்கள், விரைவு பேருந்துகளில் எல்லா இருக்கைகளும் பயன்படுத்தலாம்

471
0
SHARE
Ad

கோலாலம்பூர்: விமானங்கள் மற்றும் விரைவு பேருந்து சேவைகள் உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும் அனைத்து இருக்கைகளுக்கும் பயணிகளை அனுமதிக்கலாம் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

முன்னதாக, அதிகமான இருக்கைகள் விமானத்தில் காலியாக விடப்படுவதால் விமான நுழைவுச் சீட்டின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சு விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வர இருந்த நிலையில், இந்த விலை அதிகரிப்பு மக்களுக்கு சுமையாக இருக்கும் என்று கருதப்பட்டது. குறிப்பாக, தீபகற்பத்திலிருந்து, சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு இது சுமையை ஏற்படுத்தும்.